வட தமிழ்நாடு; தென் தமிழ்நாடு உதயமாகிறது!

வட தமிழ்நாடு; தென் தமிழ்நாடு உதயமாகிறது!


பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை இரண்டு மாநிலமாக பிரிக்க வேண்டுமென்ற கோரிக்கை பெயரளவில் இருந்து வந்தது. அது தற்பொழுது பரபரப்பாக பேசப்படுகின்ற அளவிற்கு இருக்கின்றது. சில சமுதாய அமைப்புகள் சில அரசியல் இயக்கங்கள் மாநிலத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை தற்பொழுது முன்வைக்க தொடங்கியுள்ளார்கள். இதனால் ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவானதைப் போன்று தமிழ்நாடு மாநிலத்தை இரண்டாக பிரித்து வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு என்று உருவாக்கலாம் என்கின்ற நிலை மத்திய அரசின் கவனத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதற்கேற்றாற்போல் மாநில வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையை தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகரமாக உருவாக்க வேண்டும் என்று தலைமையில் தீர்மானம் நிறைவேற்றி அதை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். அதே தீர்மானத்தை வழிமொழிந்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார். இதை கூர்ந்து கவனித்தால் இதற்கேற்றாற் போல் மத்திய அரசு தனது திட்டத்தை விரைவில் அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


ஏற்கனவே தமிழ்நாட்டில் 6 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆகவே வடதமிழ்நாடு, தென்தமிழ்நாடு உருவாகும் சூழ்நிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளது.