திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலட்சியம் கருணை காட்டி பணி வழங்க மறுப்பதேன்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலட்சியம்
கருணை காட்டி பணி வழங்க மறுப்பதேன்!


திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏ.ஜெயந்திரன் தலைமை காவலராக பணியாற்றி கொண்டிருந்தார். பிரம்மதேசம் காவல் நிலையத்தில் பணியாற்றி கொண்டிருந்த போது 27.05.2009 பணியில் இருந்த பொழுது திடீரென மரணம் அடைந்தார். அரசு துறையில் பணியாற்றும் ஒருவர் இறந்து விட்டால் அவரது வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்குவது தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்வாகும். இதன் அடிப்படையில் தலைமை காவலர் ஜெயச்சந்திரன் அகால மரணம் அடைந்ததை முன்னிட்டு அவரது வாரிசுதாரரான அவரது மகன் ஜெ.மதுசூதனன் ஓவியப்படிப்பில் ஐந்தாண்டுகள் படித்து பட்டம் பெற்றவர். தந்தையின் இறப்பை முன்னிட்டு கருணை அடிப்படையில் விண்ணப்பித்து தனக்கு அரசு பணி வழங்கவேண்டும் என்று அரசுக்கு விண்ணப்பித்திருந்தார்.


ஆனால் தந்தை இறந்து 13 ஆண்டுகள் ஆகியும் அவரது மகனுக்கு அரசு பணி இதுவரை வழங்கப்படவில்லை . காவல்துறை நிர்வாகத்தில் இருந்து வருவாய் துறையில் பணி வழங்குவதாக கூறி மசூதனன் சம்மதத்துடன் திருவண்ணாமலை ஆட்சி தலைவருக்கு பரிந்துரை செய்து கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டு பணி வழங்குவதாக கூறி வந்த மாவட்ட நிர்வாகம் இன்றுவரை பணி வழங்காமல் இழத்தடித்துக் கொண்டிருக்கிறது. தற்போதைய மாவட்ட ஆட்சி தலைவர் கந்தசாமி அவர்கள் கிராம நிர்வாக அதிகாரியாக பணி வழங்க கோப்புகள் தயாரிக்கப்பட்டு வழங்குகின்ற நேரத்தில் ஏதோ காரணத்தினால் பணிவழங்காமல் காலம் கடத்தி வருகிறார். இடைப்பட்ட காலத்தில் தனது சகோதரி பத்மினி அவர்களிடம் தனக்கு பணி வேண்டாம் எனது அண்ணன் மதுசூதனனுக்கே பணியை வழங்கலாம் என்று விருப்ப உறுதிமொழி கடிதத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் வேண்டுகோளை ஏற்று அனுப்பியுள்ளார்.


மதுசூதனன் தனது தங்கை வழங்கிய மனுவை இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் கூறிய அனைத்து தகவல்களையும் கடும் சிரமத்திற்கு இடையிலும் பெற்றுக்கொடுத்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்கள் கருணை அடிப்படையில் வழங்க வேண்டிய பணியை வழங்காமல் கருணை காட்ட காரணமின்றி மறுத்துவருகிறார். காவல்துறையில் காவலர்கள் அவரது குடும்பத்தினருக்கு மறைந்த முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் முன்னுரிமை அடிப்படையில் விரைவாக கருணை காட்டகூடியவர் என்பது தமிழ்நாடு அறிந்த விஷயம். அப்படிப்பட்ட ஆட்சித் தான் தற்பொழுது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில் ஏனோ திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்தினாலும் பணியின் போது மறைந்த தலைமை காவலர் ஜெயச்சந்திரன் அவர்களின் மகன் மதுசூதனனுக்கு பணிவழங்குவதை காலம் தாழ்த்தி வருகிறார். இத்தகைய சூழல் குடும்பத் அவரது மனைவி வளர்மதி ஜெயச்சந்திரன் அவர்களுக்கு மனவேதனையும் குடும்ப பாரத்தையும் சுமந்து கொண்டு வருவாய் இன்றி தவித்துவருகின்றார். வேலையில்லாத மகன் ஒருபுறம் வேலையின்றி தவிப்பதை பார்த்து அன்றாடம் கண்ணீர் வடித்து வருகிறார். பல முயற்சிகள் மேற்கொண்ட போதும் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்கள் எப்பொழுது கருணைகாட்டுவார் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தன் மகனுக்கு கடந்த 6 மாத காலமாக அரசாங்கத்தின் ஊரடங்கு மேலும் மேலும் குடும்பத்தை வறுமையில் தள்ளிவிட்டதால் போக்குவரத்திற்கும் உணவிற்கும் கூட தடுமாற்றமான சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.


மனமுடைந்த மதுசூதனன் விதவை தாயார் வளர்மதி மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் மாநில காவல்துறை தலைவர் டி.ஜி.பி.திரிபாதி அவர்களுக்கும், மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கும், மத்திய அரசின் பணியாளர் நலத்துறைக்கும் பதிவு தபால் அனுப்பி தங்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்றும் தன் மகனுக்கு விரைவாக கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டிய பணி நியமனத்தை விரைவாக வழங்கிடமாறு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். இதன் பிறகாவது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சி தலைவர் கந்தசாமி அவர்கள் காலம் தாழ்த்தாமல் கருணையுடன் மறைந்த தலைமை காவலர் ஜெயச்சந்திரன் அவரது வாரிசான மகன் மதுசூதனனுக்கு கருணை காட்டி கருணை அடிப்படையில் பணிவழங்க முன்வருவாரா? அல்லது தன் கண் எதிரில் ஒரு குடும்பம் கஷ்டப்படுவதை பார்த்துக் கொண்டிருப்பாரா என்பதை அறிய விரும்புகிறது அக்னிமலர்கள்.


காலதாமதமாக வழங்கப்படும் நீதி என்பது ஒரு பாமரனுக்கு இழைக்கப்படும் அநீதியாக நீதிதுறை வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் காலதாமதம் ஆனாலும் தமிழ்நாடு அரசு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மதுசூதனனுக்கு அரசு பணி வழங்கி உதவி செய்தால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மரணம் அடைந்த தலைமை காவலர் ஜெயச்சந்திரன் ஆன்மா சாந்தியடையும். புரட்சி தலைவி அம்மாவின் ஆட்சியும் புகழ் அடையும். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சி தலைவர் கந்தசாமி அவர்களின் அலுவலகத்தில் உள்ள மதுசூதனன் சம்பந்தப்பட்ட கோப்புக்கு விரைவில் தீர்வு காணப்படுமா? நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். தந்தையை பரிகொடுத்து தவித்துக் கொண்டிருக்கும் மதுசூதனன் தமிழக அரசின் கவன ஈர்ப்புக்காக இந்த செய்தி வெளியிடப்படுகிறது.


- சுகுமாறன் மூத்த வழக்கறிஞர்
Chief-In-Editor, Bangalore