ஜெயலலிதாவின் வளர்ச்சியில் பண்ருட்டி ராமச்சந்திரனின் பங்கு...

ஜெயலலிதாவின் வளர்ச்சியில் பண்ருட்டி ராமச்சந்திரனின் பங்கு...


வானில் மிகப் பெரி 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மறைந்த செய்தி இந்திய அரசியல் பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. பிரதமர் ராஜீவ்காந்தி, தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் பங்கேற்ற கடைசி நிகழ்வு. சென்னை கிண்டி கத்திப்பாராவில் நேரு சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற நிகழ்வு. உடல் நலம் குன்றியிருந்த எம்.ஜி.ஆர். சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்து பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் தமிழ்நாட்டுக்கு ஓடோடிவந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் எம்.ஜி.ஆர். அவர்களை பார்த்து நலம் விசாரித்தார். மிகவும் ஆபத்தான நிலையில் அவர் இருப்பதாகவும் அயல்நாட்டுக்கு சென்று மருத்துவ சிகிச்சை அளித்தால் அவர் காப்பாற்றப் படலாம், பிழைத்துக் கொள்வார் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். அந்த ஆலோசனையை அப்படியே ஏற்றுக்கொண்ட இந்தியாவின் பிரதமர் அன்னை இந்திராகாந்தி அவர்கள் சிறப்பு விமானத்தின் மூலம் அமெரிக்கா சென்று எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய அரசின் சார்பில் அனுமதி வழங்கியிருந்தார்.


இந்த தருணத்தில் அரசியல் சாணக்கியர் என்று அனைவராலும் கூறப்பட்ட பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள் பிரதமர் இந்திராகாந்தி அவர்களோடு தனக்கு இருந்த நெருக்கத்தை பயன்படுத்தி மேலும் பல உதவிகளையும் மத்திய அரசாங்கம் செய்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவற்றையெல்லாம் அப்படியே ஏற்றுக்கொண்டு மத்திய அரசு எம்.ஜி.ஆரை எப்படியாவது காப்பாற்றி ஆக வேண்டும் என்பதற்காக பிரதமரின் உத்தரவை நிறைவேற்றி தந்தது அமெரிக்காவிலுள்ள புருக்லி மருத்துவமனை நிர்வாகம். எம்.ஜி.ஆரின் அதிர்ஷடம் பிரதமர் இந்திராகாந்தி நினைத்ததை போன்று தீவிர மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் பெற்று தாயகம் திரும்பினார். ஆனால் தமிழ்நாட்டுக்கு வந்து சென்ற பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் டெல்லியில் தனது வீட்டுக்குள் இருந்த பிரதமர் அலுவலகத்திற்கு சென்ற போது தனது பாதுகாவலர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டார் என்பது வரலாறு. அதன்பிறகு பிரதமராக பதவியேற்ற ராஜீவ்காந்தி அவர்களும், எம்.ஜி.ஆர் அவர்களும் நெருங்கி பழகும் வாய்ப்பை எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள் ஏற்பாடு செய்து தந்தார்.


இந்த செயல் எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் இருந்த பதவிக்கு பலவிதமான சந்தேகங்களை தோற்றுவித்தது. குறிப்பாக ஆட்சியை பறிகொடுத்து கிட்டத்தட்ட 12 ஆண்டுக்கு மேலாகியும் ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியவில்லையே என்று கவலையில் இருந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் ஏற்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் தான் இந்தியா, இலங்கை ஒப்பந்தம் ராஜீவ்காந்தி அவர்களால் உருவாக்கப்பட்டு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆதரவோடு நிறைவேற்றுவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. இதுவும் எதிர்கட்சி தலைவரான கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. இதனால் ராஜீவ்காந்தி ஜெயவர்த்தனை ஒப்பந்தம் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் போர்க் குரல் எழுப்பியது. இதையும் மீறி இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களும் இலங்கை அதிபர் ஜெயவர்தனும், பிரேமதச அவர்களும் இணைந்து இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் ஏற்பாட்டின் போது இந்திய அரசின் சார்பில் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களும் இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் அவர்களும் பங்கேற்ற போது தமிழ்நாட்டில் இருந்து அந்த ஒப்பந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர், எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதனால் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களும் இலங்கை தமிழர்களின் ஆதரவாளர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு பிரபாகரன் அவர்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து தனக்கு நன்மை செய்வதாக என்று கூறிக்கொண்டு இருந்த தி.க.தலைவர் கி.வீரமணி, மற்றும் தமிழ் தேசிய இயக்க ன், வை.கோபாலசாமி, போன்றவர்களெல்லாம் பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களை இலங்கை தமிழர்களின் எதிரியாக பாவித்து அவரை குறித்து பல்வேறு விதமான எதிர்ப்பு தகவல்களை பதிவு செய்து எம்.ஜி.ஆர். இடத்தில் கூட புகாராக தெரிவித்தார்கள். ஆனால் புரட்சி தலைவர் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் புகார்களையெல்லாம் புறம் தள்ளிவிட்டு பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களை நட்புடனும், ஆலோசகராகவும் அருகிலேயே வைத்துக் கொண்டிருந்தார் என்பது பலருக்கு தெரிந்த விஷயம்.


இத்தகைய நெருக்கம் அதிமுகவிலுள்ள அமைச்சரவை சகாக்களின் குறிப்பாக ஆர்.எம்.வீரப்பன் ஆதரவு பெற்றவர்கள் பண்ருட்டியார் மீது புகார் கணைகளை தொடுத்தார்கள். ஒரு கட்டத்தில் ஆர்.எம். வீரப்பனிடம் இருந்த இலாக்காவை பறித்த எம்.ஜி.ஆர். ஆர்.எம். வசம் இருந்த உணவு இலாக்காவை பண்ருட்டி ராச்சந்திரனிடம் வழங்கினார். இதன் பிறகு எம்.ஜி.ஆர். மறைவினால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியில் சிக்கிக் கொண்டது அதிமுக சிக்கிக் கொண்டது. அந்த சிக்கலில் இருந்து ஆட்சியை காப்பாற்றுவதற்காக ஆம்.எம். வீரப்பன் ஒருபுறம் நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் பண்ருட்டி ராமச்சந்திரன் ஒருபுறம் இரு அணிகளாக பிரிந்தது. ஜானகி எம்.ஜி.ஆர் தலைமையிலான ஆர்.எம்.வீரப்பன் அணிக்கு திமுக தலைவர் ஆதரவு என்ற நிலையும், நாவலர் நெடுஞ்செழியன், பண்ருட்டியார் அணிக்கு காங்கிரஸ் ராஜீவ்காந்தி ஆதரவு நிலையும் உருவானது. இந்த சூழ்நிலையில் தான் அதிமுகத்திற்கு ஜெயலலிதா தலைமையை தேர்வு செய்து ஆட்சியை கைப்பற்றுகின்ற முயற்சியில் பண்ருட்டி ராமச்சந்திரன் அதிதீவிரமாக ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தி அரசியல் சதுரங்க வேட்டையை தொடங்கி வைத்தார்.


ஆர்.எம்.வீரப்பன் ஜானகி அம்மையாரை முதல்வராக அறிவித்து பதவி பிரமாணம் செய்துவைத்து ஆட்சியை தக்கவைத்து கொள்வதற்கு திமுகவின் ஆதரவை கலைஞர் கருணாநிதி அவர்களிடம் கடிதம் கொடுத்து ஆதரவு கேட்டார். ஆனால் எதிர்பார்த்தப்படி திமுக சட்டமன்றத்தில் ஜானகி அம்மையாரின் ஆட்சிக்கு ஆதரவு தரவில்லை என்பது உறுதியானது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை மிக சமார்த்தியமாக திறமையாகவும், பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களிடமும் உள்துறை அமைச்சர் புட்டாசிங் அவர்களிடம் தனக்கு இருந்து செல்வாக்கை பயன்படுத்திய பண்ருட்டி ராமச்சந்திரன் ராஜீவ்காந்தி ஆதரவை தங்கள் அணிக்கு சாதகமாக மாற்றிவிட்டார்.


ஜானகி அம்மையார் தனது பெரும்பான்மையை பெறுவதற்கு சட்டமன்றம் கூடியது சட்டமன்றத்தில் கைகலப்பு ஏற்பட்டது. பெரும்பான்மையை இழந்த அதிமுக அரசு கவிழ்ந்தது. ஒருவேளை திமுக ஆதரவு கிடைத்திருந்தால் ஜானகி அம்மையார் தலைமையிலான அரசு சில ஆண்டுகள் நீடித்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். ஆதரவு வேண்டி கடிதம் கொடுத்தும் கலைஞர் கருணாநிதி அவர்கள் நிராகரித்ததால் நாட்களில் ஜானகி ஆட்சி கவிழ்ந்தது. தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. தமிழக ஆளுநராக பிரதமர் இந்திராகாந்தி அவர்களிடம் நீண்டநாள் தனி செயலாளராக இருந்த அலெக்சாண்டர் (ஐ.ஏ.எஸ்) தமிழக ஆளுநராக பொறுப்பேற்றார். இந்த நிலையில் ஜெயலலிதா அவர்களின் வளர்ச்சிக்கும் அவரது தலைமையில் உள்ள அதிமுக ஒன்றுப்பட்டு மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு வாய்ப்பை அமைத்து கொடுத்த பெருமை எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் நீண்ட கால பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களின் தொலைநோக்கு பார்வையும் அரசியல் சாணக்கியத்தனமும் ஜெயலலிதா அவர்களுக்கு பயன்பட்டதென்றால் அது மிகையில்லை.


ஒருவேளை ஜெயலலிதா அவர்களை பொதுச்செயலாளராக முன்மொழியாமல் கே.கே., எஸ்.ஆர். ராமச்சந்திரன், திருநாவுக்கரசு போன்றோர் கூறியப்படி நாவலரோ பண்ருட்டி ராமச்சந்திரரோ பொதுச்செயலாளராக செயல்பட்டிருந்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிமுக கழகத்தின் வளர்ச்சி என்பது வேறு ஒரு புதிய திசையில் பயணித்திருக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அதே நேரத்தில் சசிகலா நடராஜன், திட்டமும் தோல்வியை சந்தித்திருக்கும். நடராஜனின் புத்திசாலிதனம் பண்ருட்டி ராமச்சந்திரன், நாவலர் நெடுஞ் செழியன் போன்றவர்களை சாமார்த்தியமாக தனிப்படுத்திவிட்டார். பிறகு அரங்கநாயகம், எஸ்.டி.சோமசுந்தரம் போன்றோர்களும் அதிமுக வை விட்டு வெளியேறி விட்ட நிலைமை ஏற்பட்டு முழுக்க, முழுக்க நடராஜன் சசிகலா கட்டுப்பாட்டுக்குள் இருந்துக்கொண்டு அதிமுகவை வழிநடத்தி வந்தார் ஜெயலலிதா என்பது தமிழக அரசியலில் பிரபலப்படுத்தாத ஒரு விஷயம். இதற்கு பக்கபலமாக நின்று அதிதீவிரமாக பணியாற்றியது தமிழக பத்திரிகைகளும் ஊடகவியலாளர்களும் என்றால் அது மிகையில்லை. -


டெல்லிகுருஜி