அதிமுக இன்றைய நிர்வாகிகள் நாளைய வேட்பாளர்கள்!

அதிமுக
இன்றைய நிர்வாகிகள் நாளைய வேட்பாளர்கள்!


அதிமுக சமீபத்தில் வெளியிட்டுள்ள மாவட்ட செயலாளர்கள் பட்டியல் மற்றும் கட்சியின் பல்வேறு நிலை நிர்வாகிகள் பட்டியல் 20201 ஆம் ஆண்டு வருகின்ற சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு வெளி யிடப்பட்டுள்ள பட்டியல் ஆகும். கடந்த கால நிர்வாகிகளும், தற்போதைய நிர்வாகிகளும் நினைத்துப் பார்த்தால் 150 தொகுதிகளை குறிவைத்து பல்வேறு நிலைகளில் புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளது.


அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு வெளியிடப்படும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள பலருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு உறுதியாக கிடைக்கும் என்கி அளவில் புதிய நிர்வாகிகள் பட்டியலை தயாரித்துள்ளார்கள். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகிய மூத்த நிர்வாகிகள். வரும் தேர்தலில் எப்படியும் ஆட்சியை தக்கவைத்து கொள்ளவேண்டும் என்ற முயற்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதிகம் தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சாதிக்கும் அதிக அளவில் முன்னுரிமை கிடைக்கின்ற அளவில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தெற்கு தமிழகத்தில் தேவர் சமுதாயத்தினருக்கும், மேற்கு தமிழகத்தில் கொங்கு வேளாளர் கவுண்டர் சமுகத்திற்கு, வடக்கு தமிழகத்தில் வன்னியர்களுக்கும் கூடுதல் முக்கியத்துவம் கட்சியில் வழங்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பெரும் சமுதாயமும் தேர்தல் களத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டால் சுமார் 150 தொகுதிகளை சுலபமாக கைப்பற்றி விடலாம் என்கின்ற அளவில் கணக்குப் போட்டு இந்த பட்டியலை தயாரித்திருப்பதாக நம்ப தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


இவை தவிர அதிமுகவின் வாக்கு வங்கியான ஆதி திராவிட சமுதாயம், யாதவர் சமுதாயம், நாடார் சமுதாயம், அருந்ததியர் சமுதாயம், முதலியார் சமுதாயம், நாயுடுகள் சமுதாயம் உள்பட பல்வேறு சாதி, சமய சார்ந்த வாக்கு வங்கிகளை தக்கவைத்து கொள்வதற்கும் மேற்படி சமுதாயங்களை சார்ந்தவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளை செய்து கொடுப்பதற்கும் அதிமுக அரசு பல்வேறு நலதிட்டங்களை தயாரித்து 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மக்களுக்கு சென்று அடைகின்ற அளவிலே வியூகம் வகுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரு மாவட்ட செயலாளர் கட்டாயம் வெற்றிப்பெற வேண்டும் அதே போல் அவர் தேர்ந்தெடுக்கின்ற ஒரு வேட்பாளரை தேர்தலில் வெற்றிப்பெற செய்யவேண்டும் அப்படி வெற்றிப்பெற வைத்துவிட்டால் 150 தொகுதிகளின் அதிமுக சுலபமாக வெற்றிப்பெறும் 2021 தேர்தலில் என்று காய் நகர்த்துகிறார் எடப்பாடி பழனிசாமி. இதன் மூலம் சசிகலாவின் ஆதிக்கதை குறைப்பதற்கும் வழிப்பிறக்கும் என்று கருதுகிறாராம் முதல்வர்


இதன் மூலம் சசிகலாவின் ஆதிக்கதை குறைப்பதற்கும் வழிப்பிறக்கும் என்று கருதுகிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஒருவேளை சசிகலாவின் விடுதலை முன் கூட்டியே அமைந்து விட்டால் கட்சிக்குள் ம் தலை தூக்கலாம் என்ற அச்சமும் புதிய நிர்வாகிகள் நியமிப்பதற்கு காரணம் என்கிறார்கள். கட்சி நிர்வாக வசதிக்காக என்று கூறப்பட்டாலும் கடந்த கால நிர்வாகிகள் பெரும்பாலானவர்கள் சசிகலாவின் ஆதரவு பெற்றவர்களாக இருப்பதினால் புதிதாக நியமிக்கப்படும் நிர்வாகிகள் தங்களுக்கு ஆதரவாக இருந்து எதிர்காலத்தில் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையும் ஒபிஎஸ், ஈபிஎஸ்-க்கு உண்டாம், இருந்தாலும் சசிகலாவின் பெயரை சொல்லி தினகரன் ஆதரவாளர்கள் இப்பொழுதே அதிமுக நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு தேவைப்படும் பொழுது நாங்கள் உங்களுக்கு உதவி கரம் நீட்டுவோம் என்று கூறுகிறார்கள்.


புதிய நிர்வாகிகளின் பட்டியலால் ஒபிஎஸ்., ஈபிஎஸ்-க்கு தலைவலிப் போய் திருகுவலியும் வரலாம். ஆட்சியின் இறுதியாண்டு நெருங்கி வருவதால் தற்பொழுது சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் தங்களுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யவில்லையென்றால் வேறு திசை நோக்கி செல்வதற்கும் மாற்று கட்சிக்கு தாவுவதற்கும் இவற்றை எப்படி சமாளிக்கப் போகிறார்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஒ.பன்னீர்செல்வமும் என்பது தான் பலருடைய எதிர்பார்ப்பு.


- சாமி