பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவின் ஆணைப்படி தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியை வழிநடத்தி செல்கிறாரா? அல்லது தினகரனுக்கு எதிராக சசிகலா குடும்பத்தை விலக்கி வைத்துவிட்டு தான் அதிமுக ஆட்சி தொடருமா? இதுபற்றிய உண்மை தகவல்களை தெரிந்து கொள்ள வாசகர்கள் விரும்பிகிறீர்களா? ஆம்? இல்லை ? பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆகி வெளியே வரும்போது ஒரு புதுவிதமான தெம்போடும் நம்பிக்கையோடும் வருவார். அவர் வருகை என்பது தமிழக அரசியலில் ஒரு மிகப் பெரிய தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்த போவது உறுதி. குறிப்பாக அதிமுக 2021 தேர்தலுக்குப் பிறகு சசிகலாவின் ஆளுமையின் கீழ் அதிமுக இயங்கும் என்றால் அது மிகையில்லை.
தற்போதுள்ள முதல்வர் எடப்பாடியின் ஆட்சி என்பது மீண்டும் அதிமுக வெற்றிப் பெற்றாலும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தொடரமாட்டார். அதே போல் ஒ.பன்னீர்செல்வம் அவர்களும் ஆட்சி அதிகாரத்தை இழப்பார். தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றிப்பெற்றாலும் சசிகலாவின் ஆணைப்படி ஒரு புதிய முதல்வரை உருவாக்கும் அளவிற்கு சசிகலாவின் கை உயர்ந்து நிற்கும். பிரதமர் மோடியின் ஆதரவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இயக்கமும் தமிழக அரசியலில் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை தோற்றுவிக்கும். குறிப்பாக பிரதமர் மோடி அமிர்ஷா, ரஜினிகாந்த் ஆகிய மூவரின் ஆதரவும் கூடவே சசிகலாவின் ஆதரவும் முழுமையாக பெற்றுள்ள ஒருவரால் மட்டுமே தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக வரும் வாய்ப்பு கிட்டும். ஒருவேளை சசிகலாவிற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி அவர்களும் ஒ.பன்னீர்செல்வம் அவர்களும் புதிய வியூகம் வகுத்து சசிகலாவிற்கு எதிராக தங்கள் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றிப்பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடலாம். அத்தகைய முயற்சிக்கு மிகப் பெரிய அளவில் முட்டுக்கட்டை விழும் என்பதில் சந்தேகமில்லை . முதல்வர் எடப்பாடியின் ஆட்சியினுடைய காலம் முழுவதும் நிறைவு பெற்று புதிய ஆட்சி அமைப்பதற்கான 2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்டு (தள்ளிப்போகாமல்) கூட்டணி கட்சிகள் ஆ வேட்பாளர் தேர்வுகள் நடைபெறும் பொழுது மிகப் பெரிய அளவில் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு வேட்பாளர் தேர்வு உரிய நேரத்தில் வெளியிட முடியாமல் காலதாமதம் ஏற்பட கூடிய வாய்ப்பும் ஏற்படும்.
தற்போதுள்ள அதிமுக ஆட்சியில் சசிகலாவின் ஆணைக்கு கட்டுப்பட்டு எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் அமைச்சர்கள், பல சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சியின் ஆயுட்காலம் முடிவுறும் தருவாயில் பகிரங்கமாகவே சசிகலாவை ஆதரிக்கும் சூழ்நிலையை உருவாக்குவார்கள். அதோடு மட்டுமின்றி சசிகலாவிற்கு ஆதரவாக குரல் எழுப்புவார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி சமாதானம் என்ற போர்வையில் சசிகலா அதிமுக கட்சிக்குள் தனது அதிகாரத்தை செலுத்துவதற்கு முயற்சி செய்வார். அதன் அடிப்படையில் தனது ஆதரவாளர்களின் பட்டியலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்து அதில் உள்ள வேட்பாளர்களை அதிகார பூர்விகமாக அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளுமாறு நிர்பந்தம் செய்வார். வேறு வழியின்றி ஒபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் இணைந்து கட்சிக்குள் நிலவும் சசிகலாவின் ஆதரவாளர்....
சசிகலா வழங்கிய பட்டியலை தங்கள் பட்டியலோடு இணைத்துக் கொண்டு வேட்பாளர்களை அறிவிப்பார்கள். ஒருவேளை தற்பொழுது உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கட்டாயம் அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று விரும்பி அவர்களுக்கு வாய்ப்பு வழங்கினாலும் அதில் இடம்பெற்றுள்ள 60 சதவிதம் பேர் சசிகலாவின் ஆதரவு பெற்றவர்களாக மாறிவிடுவார்கள். ஆகவே அடுத்த தேர்தல் என்பது அதிமுக கழகத்திற்கு சசிகலாவை ஒதுக்கிவைத்துவிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, ஒ.பன்னீர்செல்வமோ தாங்கள் விருப்பம் போல் கட்சிக்குள் அதிகாரம் செலுத்த இயலாது என்பது நிஜம். ஒருவேளை பிரதமர் மோடி அவர்கள் உள்துறை அமைச்சர் அமிர்ஷா அவர்கள் கோரிக்கையை ஏற்க மறுத்து சசிகலாவை மீண்டும் அதிமுகவிற்குள் சேர்ப்பதற்கு தடை ஏற்படுமே ஆனால் அதனுடைய விளைவுகள் மிகப் பெரிய பாதிப்பையும் இழப்பையும் அதிமுக கழகத்திற்கும் முதல்வர் எடப்பாடி, ஒ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் ஏற்படும் அபாயம் தோன்றும். இவைகளையும் கடந்து சசிகலா அவர்கள் விடுதலைக்குப் பிறகு அரசியல் ஆர்வமின்றி அதிமுகவை பற்றி கவலைப்படாமல் ஒதுங்கி கொள்வார் என்று நினைத்தாலும் அது நிச்சயம் நடைபெறாது. தினகரன், திவாகரன் மற்றும் சசிகலாவின் ஆதரவாளர்கள் சசிகலாவை பயன்படுத்தி நிர்பந்தித்து அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் அதிதீவிரமாக ஈடுபடுவதற்கு முயற்சிப்பார்கள். காலத்தின் கட்டாயம்.
அரசியலில் இருந்தும் முதல்வர் பதவியில் இருந்தும் சசிகலா ஒருபோதும் விலகி நிற்கமாட்டார். ஏற்கனவே தனக்கு ஏற்பட்ட விரும்ப தகாத நிகழ்வுகளையும், அதனால் ஏற்பட்ட பின் விளைவுகளையும் நான்கான்டு கால சிறைவாசத்தையும் அமைதியாக ஏற்றுக்கொண்டு தைரியமாக சிறை சென்றவர். சிறையில் இருக்கும் போதே தன் கணவரை இழந்தவர். அரசியல் அதிகாரத்தையும் இழக்க முன்வரமாட்டார். கடந்த 33 ஆண்டுகள் அவர் கற்ற அரசியல் பாடம் என்பது ஜெயலலிதாவால் சசிகலாவா? சசிகலாவால் ஜெயலலிதாவா? என்ற நிலை மாறி தனது அரசியல் அனுபவத்தை ஒரு பார்வையாளராக இருந்து தமிழக அரசின் நிர்வாகத்தையும் மதிப்பீடு செய்து கொண்டிருந்தவர் என்ற வகையில் சசிகலா அவர்களுடைய ஆதரவு பெற்ற அரசியல் கட்சி தலைவர்கள் அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை, நீதிதுறை, நிர்வாகத்துறை இவை மூன்று திசைகளில் இருந்தும் ஆலோசனை வழங்குவதற்கும் நிழல் ஆதரவு தருவதற்கும் பலர் சசிகலாவிற்கு துணை நிற்பார்கள். ஆகவே சசிகலா அவர்கள் சிறையிலிருந்து வெளியே வரும் பொழுது அடிப்பட்ட புலியாக அனுபவம் மிக்க அரசியல்வாதியாக விடுதலை ஆவார்.
அவரது பங்கு தமிழக அரசியலில் எதிர்காலத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக விஸ்வரூபம் எடுக்கும். சிறைக்கு செல்லும் முன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை முதலமைச்சராக்கினார், ஜெயக்குமார், செங்கோட்டையன் அவர்களை அமைச்சரவையில் இடம் பெற செய்தார். வளர்மதி அவர்களுக்கு வாரியம் தந்தார். தலவாய் சுந்தர் அவர்களுக்கு டெல்லி பிரதிநிதி சிபாரிசு செய்தார். இப்படி பலருக்கு சிறைக்கு செல்வதற்கு முன் உதவி புரிந்த சசிகலா சிறையில் இருந்து மீண்டு வெளியே வந்தப் பிறகு அவருக்கு எதிரான இன்று செயல்பட கூடியவர்கள் நாளை வாயடைத்துப் போவார்கள். தங்கள் எதிர்கால நன்மையை கருதி மீண்டும் சசிகலா ஆதரவு நிலையை ஏன் எடுக்க மாட்டார்கள் என்ற கேள்வி பிறக்கும். அதன் விளைவு தாங்கள் விருப்பப்படி நான்கான்டு காலம் ஆட்சியை பாதுகாப்பாக நான் வழிநடத்தி சென்றேன் ஆட்சியை கவிழ்ப்பதற்கு ஒபிஎஸ் போன்ற 11 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சிக்கு எதிராக வாக்களித்தும் 21 சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரனை ஆதரித்து பதவியை இழந்தப் பிறகும் இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைத்து கொண்டேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சசிகலாவின் விருப்பத்திற்கு மாறாக நான் செயல்பட மாட்டேன் என்று கூறமாட்டார் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஒ.பன்னீர்செல்வம் எழுப்பிய சந்தேகத்தின் அடிப்படையில் சசிகலாவிற்கு எதிராக தொடரப்பட்ட, நியமிக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையமும், ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லம் நினைவில்லமாக மாற்றும் திட்டமும் தொடர்கதையாகவே முடிவுறாமலே சென்று கொண்டிருக்கிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்றுவரை சசிகலாவிற்கு எதிராக எந்தவொரு பேட்டியோ அறிக்கையோ, வெளியிட்டதில்லை. எப்பொழுதும் சசிகலா விஷயத்தில் மௌனமாகவே இருந்து வருகிறார். ஏகலவைனை போல்?