போராட்டத்தின் மூலம் தீர்வு காண முடியுமா?

போராட்டத்தின் மூலம் தீர்வு காண முடியுமா?


குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்று மத்திய அரசுக்கு எதிராக தியாவில் உள்ள சில மாநிலங்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் மிகப் பெரிய அளவில் எதிர்ப்பு குரல் எழுப்பப்படுகிறது. இந்த விஷயத்தில் முஸ்லீம் இஸ்லாமிய சகோதரர்கள், சகோதரிகள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக ஒருசில அரசியல் கட்சிகளும் உதவி புரிந்து வருகின்றன என்பதை பார்க்க முடிகின்றது. எந்த ஒரு விஷயத்தையும் போராட்டங்கள் மூலம் வென்று விட உடனடியாக இயலாது. ஆகவே சட்டத்தின்படி சில விஷயங்களை முன்னெடுத்து செல்வதால் வெற்றிப்பெற வாய்ப்பு உண்டு. அல்லது வெற்றிப் பெற இயலாமலும் போகலாம். மத்திய அரசை பொறுத்தவரை பிரதமர் மோடி அவர்களும் உள்துறை அமைச்சர் அமிர்ஷா அவர்களும் தெளிவாக கூறிவிட்டார்கள்.


குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற இயலாது என்று இதன் பிறகும் தமிழ்நாட்டில் நடைபெறும் போராட்டங்கள் எத்தகைய முடிவை தரும் என்று கணிக்க இயலாது. ஒருவேளை நாடாளும் மன்றத்தின் மூலம் சட்டத்தில் சில ஆபத்தான நிலைகளை மாற்றுவதற்கு முயற்சி செய்தால் அதில் பலன் கிடைக்க வாய்ப்பு உண்டு. பிரதமர் மோடி அவர்கள் உரைகளை கூர்ந்து கவனிக்கும் போது தற்போது உள்ள இந்திய குடிமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று கூறுவார். மேலும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், ரோகித் இந்து முஸ்லீம்கள் உள்பட பலர் ஏற்கனவே குடியுரிமை பெற்று இருந்தால் அவர்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பாடாது என்று மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அலட்சியப்படுத்தக் கூடிய ஒன்று அல்ல. கூர்ந்து கவனிக்கப்படி வேண்டிய விஷயம் என்பதே நிஜம். இதையும் மீறி தங்களுக்கு ஆபத்து வரும் இன்றைக்கு எங்களுக்கு வரும் ஆபத்து நாளை இன்னும் சிலருக்கு வரும் அடுத்தநாளே உங்களுக்கும் ஆபத்து வரும் குடியுரிமை சட்ட திருத்தத்தினால் என்று பிரச்சாரம் செய்வது அந்த பிரச்சாரத்திற்கு ஆதரவாக மக்களை திரட்டுவது போராட்டம் நடத்துவது தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது அவசியமற்ற ஒன்றாக பார்க்கப்பட வேண்டிய விஷயம்.


அரசியலுக்கு அப்பாற்ப்பட்டு சில விஷயங்களை நாம் அணுக வேண்டும். அதே போல் குடியுரிமை திருத்த சட்டத்தையும் நாம் அணுக வேண்டியது காலத்தின் கட்டாயம். இதில் அரசியல் தலையீடு இருக்குமேயானால் அந்த தலையீட்டால் எந்த அரசியல் இயக்கமும் அல்லது கட்சியும் எந்த ஒரு ஆதாயத்தையும் அடைய முடியாது என்பது திண்ணம். குறிப்பாக இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்காக இந்துக்களும், கிறிஸ்துவர்களும் இணைந்து குரல் கொடுத்தாலும் சட்டத்தில் எந்தவித மாற்றத்தையும் கொண்டு வர இயலாது. மாறாக நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை மட்டுமே தலையெடுக்கும். தமிழ்நாட்டை பொறுத்தவரை சட்ட மன்றத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும் தமிழ்நாட்டில் சட்டத்தை நடைமுறை படுத்தமாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று குரல் எழுப்புகிறது. அதற்கு சபாநாயகர் அவர்கள் தனது உரையின் மூலம் இயலாது என்று அறிவித்து விட்டார்.


இந்த நிலையிலும் தமிழகத்தில் இன்னும் போராட்டம் தொடர்கிறது. இத்தகைய போராட்டங்கள் எத்தகைய பலனை தரும் என்பதை இஸ்லாமிய சகோதரர்களும், சகோதரிகளும் அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் கிறிஸ்துவ இந்து சகோதர, சகோதரிகளும் யோசித்து பார்க்க வேண்டும். ஆகவே போராட்டங்களை கைவிட்டு தங்கள் உரிமைகளை பெறுவதற்கு ஏற்ற மாற்று வழியை கையாளுவதே வெற்றிக்கு வழிவகுக்கும். இதற்கு மாறாக ஒரே திசையில் நின்று போராடிக் கொண்டே இருந்தால் எந்த பலனும் கிடைக்க வழியில்லை. போக போக அரசியல் இயக்கங்களின் ஆதரவும், உதவிகளும் நீர்த்து போகும். இதனால் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் தனித்து பிரித்து பார்க்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அன்பான வேண்டுகோள் நடுநிலையான பத்திரிகையாளன் என்ற முறையில் அக்னிமலர்கள் தனது கருத்தை நல்லெண்ணத்துடன் பதிவு செய்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு சாதி, மதம், மொழி இவைகளை கடந்து நல்லெண்ண அடிப்படையில் ஒரு விஷயத்தை அணுகுவது எந்தவித இழப்பும் இன்றி நல்ல பலனை தரும்.