புதிய நம்பிக்கை தரும் தேர்தல் முடிவு

புதிய நம்பிக்கை தரும் தேர்தல் முடிவு


நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவு என்பது இந்திய இளைஞர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது. குறிப்பாக ஜெக்ரிவால் மூன்றுவாது முறையாக முதலமைச்சர் ஆகிறார். இது ஒருதனித மனிதனுடைய ஒரு மாநிலமே இருக்கிறது என்ற செய்தியை பறைசாற்றுகிறது. 125 ஆண்டுகள் கடந்த பேரியக்கம் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய இருபெரும் இயக்கங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு ஆம் ஆத்மி என்ற ஒரு புதிய கட்சி தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெறுவது என்பது சாதரண விஷயமாக கருதிவிட முடியாது. ஆம் ஆத்மி கட்சி கஜ்ரிவால் அவர்கள் திரைப்பட நட்சத்திரமோ அல்லது பிரபலமான கட்சியில் அங்கத்தினர் அல்ல.


ஊழல் ஒழிப்பு இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அன்னா அசாரா உடன் ஒரு தொண்டனாக பயணித்தவர். அவரை விட்டு விலகிய ஓராண்டிலேயே ஒரு இயக்கத்தை உருவாக்கி டெல்லி அரசியலில் இன்றுவரை கொடி கட்டி பறக்கிறார். பல தடைகளை தாண்டி இன்னல்களை கடந்து நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையுடன் தனது அரசியல் பயணத்தை தொடர்கிறார். இத்தகைய ஒரு அரசியல்வாதி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மா லத்திலும் இருப்பார்களே ஆனால் ஓரளவு குற்றங்கள் குறையவும் அரசியலில் புதிய பரிணாமத்தை தோற்றுவிக்கவும் முடியும். திறந்த மனதுடன் ஆட்சியை நடத்தவேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விரும்புகிறார் என்பதின் அடையாளம். இப்பொழுது நடந்து முடிந்த தேர்தலிலு பிரபதிலித்துள்ளது. இந்த பிரதிபலிப்பு இன்று இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் எதிரொலிக்கிறது. நூறாண்டுகள் பழுத்த அரசியல் தலைவர்களை மிஞ்சி நிற்கும் ஒரு சாராசரி மனிதனாக இந்த மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட இடங்களிலெல்லாம் பிணைத் தொகையை (டெபாசிட் தொகை)யை பரிகொடுத்துள்ளது. இது காங்கிரஸ் இயக்கத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு. தற்போது காங்கிரசில் உள்ள உயர்மட்ட நிர்வாகிகளால் மக்களின் நிலையை கணக்கிட முடியவில்லை என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.


மேலும், சோனியாகாந்தி, ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி முறையான வழிநடத்தவில்லை என்பதும் புரிகிறது. ஆகவே காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி என்பது எதிர்காலத்தில் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் என்பதில் ஆச்சரியமில்லை. பாரதியஜனதா பொறுத்தவரை எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் சதவீத அடிப்படையில் பார்க்கும் போது அது தனது வளர்ச்சியுைம், பலத்தையும் டெல்லி தேர்தல் பிரதிபலிக்கிறது. ஆக காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்வது என்பது மிகமிக அவசியமான ஒன்று. கெஜ்ரிவால் மீது இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு ஒருவித இனம் புரியாத உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் இந்த புதிய சிந்தனையையும் ஒரு சிறிய கட்சியை தொடர்ந்து ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற முடிவினையும் அரசியல் களத்தில் உள்ள அனைவரும் வரவேற்க தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது. டெல்லி தேர்தல் முடிவு இந்தியாவில் உள்ள அரசியல் இயக்கங்களுக்கு ஒரு பாடமாக அமைந்து உள்ளது என்றே கூறலாம்.


- டெல்லி குருஜி