அமிர்ஷாவின் வாக்குறுதி பிரதமர் மோடியின் பேச்சும்!

அமிர்ஷாவின் வாக்குறுதி பிரதமர் மோடியின் பேச்சும்!


குடியுரிமை சட்ட திருத்த மசோதா (C.A.A.) (N.R.C) சட்டங்கள் குறித்து உள்துறை அமைச்சர் அமிர்ஷா அவர்களும் வெளியிட்டுள்ள வாக்குறுதிகள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தரும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்புகள் பொதுமக்களுக்கு அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பொதுமக்களுக்கு ஆறுதல், நம்பிக்கை தரும் செய்தியாகவே பார்க்கப்படுகிறது. இலங்கை தமிழர்களை பொறுத்தவரை இரட்டை குடியுரிமை என்பதும் ஏற்புடைய ஒன்றாகவே பார்க்கப்பட வேண்டும் என்பதை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசை பொறுத்த வரை குடியுரிமை மசோதாவில் முற்றிலும் சட்டமாக்கப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற்றுவிட்டது. இதற்குப் பிறகு சட்டத்தை வாபஸ் பெறுதற்கு போராடுவதை விட எதிர்கட்சிகள் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். இத்தகைய முயற்சிக்கும் வேண்டுகோளுக்கும் உடனடி தீர்வு கிடைப்பதற்கு வழி ஏற்படும். அதே நேரம் நாட்டில் அமைதி திரும்புவதற்கும் இத்தகைய முயற்சிகள் ஆதரவாக இருக்கும். குடியுரிமை சட்டத்தை முற்றிலும் வாபஸ் பெற்றே ஆகவேண்டும் என்று இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடத்துவதும் கோரிக்கையை முன்வைத்து ஊர்வலம் பேரணி நடைபெறுவதும் தொடர்ந்து நீடித்தால் பெரும்பான்மை மக்களின் அன்றாட அலுவல்களுக்கு தடை ஏற்படும். இதனால் இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் அதிருப்திக்கும் வெறுப்புக்கும் எதிர்கட்சிகள் ஆளாக வேண்டிய கட்டாயம் உருவாகலாம். அதே நேரம் சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம்களுக்கு ஆதரவாக மட்டுமே எதிர்கட்சிகள் குரல் எழுப்புவதாகவும் சித்தரிக்கப்படும். இந்தியாவில் வாழுகின்ற சுமார் பதினைந்து கோடி முஸ்லிம் மக்களுக்கு பெரும்பான்மை மக்களின் ஆதரவும், பாதுகாப்பும் கிடைக்காமல் போவதற்கும் எதிர்கட்சிகளே பொறுப்பாக வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஒருவேளை பெரும்பான்மை மக்களின் குரல் எதிர்கட்சிகளுக்கு எதிராக திரும்புமேயானால் நாடா ளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எதிராக (ராஜினாமா) திரும்பும் வாய்ப்பும் ஏற்படும் அபாயம் உள்ளது. சறுபான்மை மக்களின் கோரக்ைகை நிறைவேறுதற்கும், இலங்கை தமிழர்களுடைய விருப்பம் நிறைவேற்றப்படுவதற்கும் குடிரியுமை மசோவில் உரிய திருத்தங்களை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து அழுத்தம் கொடுத்து நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் மேற்கொள்வதற்கு இந்தியா முழுவதும் உள்ள எதிர்கட்சிகள் மற்றும் எதிர்கட்சி ஆட்சியில் உள்ள மாநில முதல்வர்கள் ஒன்றிணைந்து ஒருங்கிணைந்து ஒரே குரலாக நின்று மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து அதில் வெற்றிப்பெற வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் கருதப்படுகிறது. இத்தகைய முயற்சிக்கு பிரதமர் மோடி அவர்களும், உள்துறை அமைச்சர் அமிர்ஷா அவர்களும், மத்திய அரசும் கண்டிப்பாக செவி சாய்த்தே ஆகவேண்டும் என்ற நம்பிக்கை எழுகிறது. நம்பிக்கை ஏற்படுகிறது. எதிர்கட்சிகள் கவனமுடன் செயல்பட்டால் கோரிக்கையில் வெற்றியும் கிட்டும்.