எடப்பாடி பழனிசாமியின் ராஜதந்திரம்!

எடப்பாடி பழனிசாமியின் ராஜதந்திரம்!


முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை அரசியல் ராஜதந்திரியாகவும் மக்கள் மனதில் இடம்பிடித்த தலைவர்களின் பட்டியலில் ஒருவராகவும் நினைத்துக் கொண்டு அதிமுக ஆட்சியையும் அதிமுக தொண்டர்களையும் வெற்றி னைக்கிறார். தோழமை கட்சிகள் பலம் அதிமுக தலைவர்களின் ஆதரவு இரண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பெரும்பான்மை சமுதாயம் வாக்குகளால் தனது அரசியல் செல்வாக்கு உயர்ந்து உள்ளது என்பதை உணர்ந்துக் கொண்டு தொடர்ந்துக்கொண்டு மீண்டும் முதல்வர் பதவியை கைப்பற்றி விடலாம் என்று கணக்குப் போடுகிறார். துணைமுதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவு நிலையில் இருந்த இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட நிர்வாகிகளையும் தன் வசப்படுத்திவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். இரட்டை தலைமையை விரும்பாதவர்களே அதிக அளவில் அதிமுகவில் உள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி எப்பொழுது நிறைவு பெறுகிறதோ அப்பொழுது சசிகலாவின் சிறை தண்டனையும் நிறைவு பெறும். இந்த சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அரசியல் நிலைப்பாட்டை எத்தகைய வகையில் கையாளப் போகிறார் என்பதை பொறுத்து தான் அவரது அரசியல் எதிர்காலம் அமையும். ஒருவேளை தன்னிடம் ஆட்சியை வழங்கிய சசிகலாவிடம் கட்சியை ஒப்படைத்து விட்டு நல்லப் பிள்ளையாகவும் நடந்துக் கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்தால் அதிமுக வினர்களால் அவர் ஓரம்கட்டப்படலாம். சசிகலா அதிகாரத்திற்கு வந்துவிட்டால் எடப்பாடி பழனிசாமி இருக்கும் இடம் தெரியாமல் இருட்டறையிலும் தள்ளப்படலாம். ஆனால் சசிகலாவால் பாவம் மன்னிப்பு வழங்கப்பட்டு எடப்பாடி பழனிசாமியை மீண்டும் ஆதரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் அதிமுக ஆட்சி அதிகாரத்தை இழக்க வேண்டிய சூழல் உருவாகும். மத்திய அரசின் ஆதரவும் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரும் எந்த சூழ்நிலைகளிலும் எப்பொழுதும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்நிலைகளில் எடுக்க மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. முதல் எடப்பாடி பழனிசாமி ஆளுமை திறனையும், அதிகார சுவையையும் முழுநேரமாக அனுபவிக்க விரும்புகிறார்! அதற்கு ஏற்றாற் போல் தனது நிர்வாகத்தை அதிகாரிகள் துணைக்கொண்டு வழிநடத்துகிறார். சட்டமன்ற உறுப்பினர்களையும், வசப்படுத்திக் கொண்டு ஆட்சியை தொடர்கிறார்.