திமுக தொண்டர்களின் பரிதாப நிலை!

திமுக தொண்டர்களின் பரிதாப நிலை!


திமுக தலைவராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் 96 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு தோழமைக் கட்சி ஆதரவுடன் 5 ஆண்டுகாலம் ஆட்சி நடத்தினார். ஆனால் தற்பொழுது திமுக தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் 100 தொகுதிகளையும் தோழமை கட்சிகள் காங்கிரஸ் 7 தொகுதியும் முஸ்லிம் லீக் 1 தொகுதியும் வைத்துக்கொண்டு அதிமுக ஆட்சியை திமுக ஆட்சியாக மாற்றிக் காட்டுவார் என்று அரசியல் நோக்கர்களும் தொண்டர்களும் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். தனது இளமை வேகத்திற்கு ஏற்றப்படி அரசியலில் சுறுசுறுப்பாக செயல்படுவார் என்று கட்சியின் முன்னோடி தலைவர்களும் நம்பினார்கள். மேடை தோறும் “ஒரு சொடுக்கு போடுவதற்குள் இந்த ஆட்சியை கவிழ்க்க முடியும் விரைவில் இந்த ஆட்சி கவிழும்" என்றெல்லாம் ஆருடம் கூறினார் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற இரண்டு இடைத்தேர்தல் முடிவுகளால் திமுகவினர் உற்சாகம் இழந்து உறக்கம் இழந்து நம்பிக்கை இழந்து நிற்கிறார்கள் என்கின்ற தகவல்கள் வெளிவருகின்றது. இத்தகைய சூழலில் தனக்கு நான் சர்வாதிகாரியாக செயல்படுவேன் என்று திமுக பொதுக்குழு கூட்டத்திலும் வீர முழக்கம் இட்டார் மு.க.ஸ்டாலின். அதே நேரம் விரைவில் வர இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிக்கொள்வது என்பதை பற்றி சிந்திக்காமல் நீதி மன்றத்தை நாடி இருப்பதும் மூலம் தனது தொண்டர்களின் மனநிலையை மலும் பலகீனப்படுத்திவிட்டார் ஸ்டாலின் என்றே என்ன தோன்றுகிறது. 2021-ல் நடைபெற போகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலை எப்படி எதிர்க்கொள்ளப் போகின்றார் என்கின்ற கேள்வி ஒவ்வொரு திமுக தொண்டர்களின் உள்ளத்திலும் எழுகின்ற கேள்வியாக உள்ளது. பத்தாண்டுகள் ஆட்சியில் இல்லாத திமு கழகம் தொண்டர்களின் மனநிலையில் ரஜினிகாந்த் இயக்கம் தொடங்கினால் அதை எதிர்கொள்வதற்கு என்பதற்கான யோசனையில் திமுக தொண்டர்கள் இருக்கின்றார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது மகன் இளைரணி செயலாளர் உதயநிதி இருவரும் எத்தகைய திட்டத்தின் மூலம் சோர்வுற்று இருக்கும் திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கும் ஓய்வின்றி உழைப்பதற்கும் எத்தகைய வழியை காண்பிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி தமிழக மக்களிடமும் இத்தகைய கேள்வி எழுகிறது.