பிரசாந்த் கிஷோர் விலகல் யாருக்கு அதிர்ச்சி!

பிரசாந்த் கிஷோர் விலகல் யாருக்கு அதிர்ச்சி!


யாருக்கு ஆதாயம்! கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துக் கொண்டு இந்திய அரசியலில் விரும்புகின்ற கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பை பெற்று தருவதாக சொல்லிக் கொள்ளும் அல்லது நம்ப வைக்கும் “அரசியல் வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர்” குஜராத்தில் நரேந்திர மோடிக்கு ஆதரவாக தனது அரசியல் கணிப்பை தொடங்கியவர் மோடி பிரதமர் ஆவதற்கும் பீகாரில் நித்திஷ்குமார் ஆட்சியை கைப்பற்றுவதற்கும் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சர் ஆவதற்கும் அரசியல் வியூகம் வகுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஒரு தனிமனிதன் கோடிக்கணக்கான மக்களில் என்ன ஒட்டங்களையும் எப்படி துல்லியமாக கணிக்க முடியும். அதுவும் வாக்காளர்களின் வாக்குகளை தான் விரும்புகின்ற இயக்கங்களுக்கு ஆதரவாக மாற்ற முடியும் என்ற கேள்வி எழுகின்றது. இருந்தாலும் மேலே குறிப்பிட்டுள்ள குஜராத், பீகார், ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் முதலமைச்சர்களை உருவாக்கிய நபராக கருதப்படும் பிரசாத்கிஷோர் உலகம் முழுவதும் தனது நட்பு வட்டாரங்களை விரிவுப்படுத்தி வருகிறார். அது மட்டும் அல்ல தனது கருத்து கணிப்பால் எந்தவொரு இயக்கத்தையும் ஆட்சி கட்டிலில் அமர்த்த முடியும் என்று நம்பும் படியாக செய்கிறார். இது வெறும் வார்த்தைகளால் மட்டும் அல்ல கோடிக்கணக்கான ரூபாய் பெற்றுக்கொண்டு எழுத்துப் பூர்வமான ஒப்பந்தமும் உத்தரவாதமும் வழங்குகிறார். ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களுக்கு எண்ண ஒட்டங்களை துல்லியமாக கணிக்க முடிகிறது என்றால் தேசிய அளவில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களும் அந்த கட்சியின் தொண்டர்களும் அதே போல் மாநில அளவில் உள்ள மாநிலக் கட்சிகளும் அதன் தொண்டர்களும் பிரசாந்த் கிஷோர் அவர்களையே தலைவராக ஏற்றுக்கொள்ளாலாமே? என்ற கேள்வி எழுவது நியாயம் தானே. இந்த பிரசாந்த் கிஷோரை நம்பி மேற்குவங்க முதல்வர் மம்தாபேனர்ஜி தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இருவரும் தாங்கள் முதல்வராக வருவதற்கு பிரசாந்த்கிஷோரிடம் ஒப்பந்தம் போட்டுள்ளதாக பிரபலப்படுத்த படுகிறார்கள். அரசியலில் எந்த கட்சி வெற்றிப்பெறும் எந்த கட்சி தோல்வியுறும் என்பதை துல்லியமாக கணிப்பதாக கூறப்படும் பிரசாந்த் கிஷோர் மக்கள் பாதிப்புக்கு உள்ளாக கூடிய குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசுக்கு முன்கூட்டியே ஆலோசனை வழங்கி இந்தியா முழுவதும் தற்பொழுது எழுந்துள்ள சிறுபான்மை மக்கள் பெருபான்மை மக்கள் ஒன்றிணைந்து நடத்திவரும் எதிர்ப்பு பிரச்சாரத்தையும் எதிர் கருத்துக்களையும் பிரதமர் மோடியின் நண்பர் என்ற அடிப்படையில் குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை இந்தியாவின் பிரதமராக உருவாக்கியவர் என்ற வகையில் இந்த குடியுரிமை பிரச்சினைக்கு சுலபமாக தீர்வு ஏன் ஏற்படுத்த முடியவில்லை . தற்பொழுது பீகார் முதல்வர் நித்திஷ்குமார் ஐக்கிய ஜனதா கட்சியிலிருந்தும் அதிரடியாக விலகி இருப்பதும் பாரதிய ஜனதா கட்சிக்கும், மத்திய அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிராக போர்க்கொடி உயர்த்தி மாநில எதிர்கட்சி ஆளும் மாநில முதல்வர்களை ஒருங்கிணைத்து மத்திய அரசை அப்புறப்படுத்த வேண்டும் குரல் கொடுப்பதும் எத்தகைய முயற்சி என்பதை தெளிவாக பிரசாந்த் கிஷோர் கூறவேண்டும். பிரசாந்த்கிஷோர் முடிவு என்பது யாருக்கு அதிர்ச்சி, யாருக்கு ஆதாயம் என்பதையும் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதுவும் ஒப்பந்த வியாபார கருத்துக்கணிப்பு.