நடிகர் விஜய்யா? 
ஆக்டோபஸ் ஆலோசனையா?




தமிழ்நாட்டில் மக்கள் ஆட்சியை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுபட வேண்டும் என்று புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய், விரும்பினால் அவர் முதலில் கடைப்பிடிக்க வேண்டிய நபர்கள் யார் யார் என்பதை அடையாளம் காண வேண்டும். திமுக ஆட்சியை தான், மன்னராட்சி என்று கூறுகிறாரா? அல்லது வாரிசு அரசியலை தான் மன்னராட்சி என்று நினைக்கிறாரா? என்பதை நடிகர் விஜய் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். அது அவருடைய வளர்ச்சிக்கும், அதனால் அவரது வளர்ச்சிக்கு நல்ல வழிகளை முதல் கட்டமாக எடுத்தவுடன் முதல்வர் பதவியை நோக்கி நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தால் அந்த திட்டத்தில் மிகப் பெரிய எதிர்ப்பு அலைகளையும், சவால்களையும் சந்திக்க வேண்டியது வரும். எனவே கூட்டணி அமைத்து அதன் மூலம் தனது விருப்பத்தை நிறைவேற்று கொள்வதற்கு முயற்சித்தால் விருப்பமும் நிறைவேறும் திட்டமும் வெற்றிபெறும்.   




மாறாக தனித்து நின்று தனது பலத்தை வெளிப்படுத்த முயற்சி எடுத்தால், அம்மிக்கல்லே ஆற்றில் பறக்கிறது என்ற பழமொழிக்கு தான் ஆளாக வேண்டி வரும். தற்போதுள்ள சூழ்நிலையில் திமுக கூட்டணி என்பது வலுவான கூட்டணியை கட்டமைத்து உள்ளதால், அந்த கூட்டணியை உடைப்பதற்கு இயலாத காரியம் என்பதை நடிகர் விஜய்யும், அவரது ஆலோசகர்களும் உணர்ந்து இருக்க கூடும். அதிமுக, பாமக, தமிழக வெற்றிக்கழகம் ஓர் அணியில் நின்று களமாடினால் ஒருவேளை திமுக கூட்டணிக்கு எதிராக ஒரு வலுவான அணியை உருவாக்கி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு வாய்ப்புகள் ஏற்படலாம். இத்தகைய முயற்சிகளால் பொதுமக்கள் நன்மதிப்பை பெற்று அதிக தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை பெற இயலும். 

முதலமைச்சர் யார் என்ற அறிவிப்பை முதலில் வெளியிடாமல் தேர்தலை சந்தித்தால் அதனால் ஏற்பட கூடிய நன்மை, நான் தான் முதல்வர் என்று அறிவித்து தேர்தலை சந்தித்தாலும், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் நடிகர் விஜய்க்கும் மிகப் பெரிய அளவில் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிடும். 1980ல் திமுக தலைவர் கருணாநிதிக்கு ஏற்பட்ட அதே நிலை நடிகர் விஜய்க்கும் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்.

எனவே ஆந்திர மாநிலத்தில் சங்கரபாபு நாயுடுவின் தெலுங்குதேச கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்தித்து வெற்றிப் பெற்ற நடிகர் பவன்கல்யாணை நினைவில் வைத்துக் கொண்டு நடிகர் விஜய் எதிர்வரும் தேர்தலில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு எதிரான வாக்குகளை பெறுவதிலும் அதிக அளவில் சட்டமன்ற தொகுதிகளில் வெற்றிப் பெறுவதிலும், சாத்தியமாகலாம். இல்லையென்றால் நடிகர் விஜய்யின் முயற்சிகள் முழுவதும் சிதறிடிக்கும். ஆலோசனை எனும் “ஆக்டோபஸ்” கூட்டங்கள் மட்டுமே வெற்றி பெறும்.       

                                                                                                -  டெல்லிகுருஜி