”லஷ்மன்ஸ்ருதி”
இசைக்குழுவின் பக்தி இசைநிகழ்ச்சி 




"ஸ்வாமியே சரணம் ஐயப்பா"

கான்பெடரேஷன் ஆஃப் தமிழ்நாடு மலையாளி அசோசியேசன் வழங்கும்

ஸ்ரீ பாக்யலஷ்மி டூர்ஸ் & ட்ராவல்ஸ் சார்பாக ஐயப்ப பக்தர்களுக்காக சென்னையில் உள்ள தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் தெய்வீக இசை நிகழ்ச்சி டிசம்பர் 07 ம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணி  நடைபெற்றது..

முழுக்க முழுக்க பக்திப் பாடல்கள் மட்டும் இடம்பெறும் இசை நிகழ்ச்சியாகும்.

“லஷ்மன் ஸ்ருதி” இசைக்குழுவினர் வழங்கும் இந்நிகழ்ச்சி தொடர்ந்து 32 வது ஆண்டாக இலவசமாக நடத்தப்படுகிறது. 

ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்களை மகிழ்விக்கும் வகையில் நடத்தப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சியில், பிரபல பின்னணி பாடகர்களும், பக்தியிசை பாடகர்களும், சூப்பர் சிங்கர்களும் பங்கேற்றுப் பாடி சிறப்பித்தனர்.

அரங்கில் வாழை அம்பலத்துடன் பதினெட்டுப்படி அமைத்து அதன்மேல் கம்பீரமாக ஐயப்பனை அமரவைத்து, சாஸ்திர சம்பிரதாய முறைப்படியான பூஜையுடன் வெகு விமரிசையாக நடத்தப்படுவதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து இந்நிகழ்ச்சியை பக்திப் பரவசத்துடன் கண்டுகளித்து வந்தார்கள். 

இந்த ஆண்டு நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பக்தி இசையில் பிரபலமாக உள்ள பின்னணிப் பாடகர்"கலைமாமணி" உன்னிமேனன் அவர்கள் தலைமையில் பின்னணிப் பாடகி"கலைமாமணி" மாலதி லஷ்மண், பின்னணிப் பாடகர்கள் முகேஷ், மகாலிங்கம், சூப்பர் சிங்கர்கள் முத்துச்சிற்பி, அருணா மற்றும் பேபி அக்‌ஷரா லஷ்மி  ஆகியோர் கலந்து கொண்டு பக்தி இசைமழை பொழிந்தனர். 

இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் என்பதனால் அனைவரும் திரளாக வருகை தந்து இந்த பக்தி இசைபூஜையில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியைக் காண வந்த பக்தர்கள் அனைவருக்கும் இசை விருந்துடன், நந்தினி ஸ்வீட்ஸ் சார்பாக இலவச பிரசாதம் வழங்கப்பட்டது. 

அனைவரும் வருக !!!  ஐயப்பன் அருள் பெறுக !