சூர்யாவின் கங்குவா திரைப்பட விமர்சனம்
நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யாவின் நடிப்பில் திரைப்படம் திரையில் வெளியானது. அதுவும் அவரின் திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் உருவான கங்குவா திரைப்படம் தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தான் படக்குழு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பேசி வந்தனர். கண்டிப்பாக கங்குவா திரைப்படம் தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்லும், ஆயிரம் கோடி வசூலை பெரும் என்றெல்லாம் படக்குழு பேசினார்கள். இதையெல்லாம் வைத்து பார்க்கையில் படம் சிறப்பாக இருக்கும் என்றே ரசிகர்கள் நினைத்தார்கள். அதற்கு நேர்மாறாக இப்படம் அமைந்தது தான் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. இந்நிலையில் தமிழ் சினிமா ரசிகர்கள் பீரியட் படம் என்றாலே தற்போது சலிப்படைய துவங்கிவிட்டனர்.