சபரிமலையில் 4 நாட்களில் 2.26 லட்சம்
பக்தர்கள் சாமி தரிசனம்
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (16-ந்தேதி) மண்டல பூஜை தொடங்கி நடந்துவரும் நிலையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தவண்ணம் இருக்கின்றனர். பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்காக தேவசம்போர்டு இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்தி இருக்கிறது. அதன்படி ஆன்லைன் முன்பதிவு மூலமாக 70 ஆயிரம் பேர், ஸ்பாட் புக்கிங் மூலமாக 10 ஆயிரம் பேர் என தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அது மட்டுமின்றி குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் சாமி தரிசனம் செய்ய செல்வதற்கு சன்னிதானத்தில் தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நடைமுறை பக்தர்கள் நெரிசலின்றி சென்று சாமி தரிசனம் செய்வற்கு உதவியாக இருக்கிறது. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கும் போது மட்டும் நடைப்பந்தலில் கூட்டமாக இருக்கிறது. மற்ற நேரங்களில் பக்தர்கள் வெகுநேரம் காத்திருக்காமல் சென்று சாமிசெய்து வருகிறார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. அன்றைய தினம் பூஜைகள் எதுவும் நடக்காவிட்டாலும், அன்றைய தினமே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அன்று முதல் நேற்று(18-ந்தேதி) மாலை வரையிலான 4 நாட்களில் 2.26லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்திருக்கின்றனர்.