திருமாவளவன் அரசியல் நிலைப்பாடு என்ன? 2026 தேர்தல் - திமுக அணியில் தொடருமா?
சமீப காலமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியும், அதன் தலைவர்கள் ஆன திருமாவளவன் மற்றும் யாதவ் அர்ஜுன், செயல்பாடுகள் தமிழக மக்களால் கூர்ந்து கவனிக்கப்படுவதுடன் திமுக தலைமைக்கும், கூட்டணிக்கும் ஒருவிதமான நெருடலை உருவாக்கி வருவதுடன், கூட்டணியை விட்டு வெளியேறும் விதமாக ஒருபுறம் பே-சுவதும், கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கட்சியினரை சமாதானப்படுத்தி திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்று தொடர்ந்து கூறிவருவதும், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருவதுடன், கூட்டணி நம்பகத் தன்மைக்கு சவாலாக இருந்து வருகிறது. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு முதல்வர் பதவி மீது ஆசை, ஆதி திராவிட மக்களை முதல்வர் ஆக்க முன்வராத அரசியல் நிலைப்பாடு என்றெல்லாம் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் ஆதவ் அர்ஜுன் போன்றோர் பேசி வருவது, தமிழக மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், எதிர்காலத்தில் தெளிவான ஒரு முடிவை எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் விடுதலை சிறுத்தை கட்சியினர் என்ற கேள்வியையும் அரசியல் வட்டாரத்தில் எழுப்பப்படுகிறது.
திமுக கூட்டணி கட்சிகள் கட்டுக்கோப்புடன் ஒரு அணியில் இருப்பதாக பேசப்பட்டாலும், தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாக அதிமுகவின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா? நிறையாசை ஆகுமா? என்பது தெரியவரும். இப்பொழுது உள்ள சூழ்நிலையில் புத்திசாலிதனமாக திருமாவளவன் பேசிவருகிறார்.