இஸ்ரோ விண்வெளி திட்டங்களில் முத்திரை பதித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசுத்தொகை:

விண்வெளித்துறையில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த ISRO விஞ்ஞானிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்” என்ற தலைப்பில் பாராட்டு விழா நடைபெற்றது. சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், ஆதித்யா எல்1 திட்ட இயக்குநர் நிகார் ஷாஜி, கே.சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வி.நாராயணன், ஏ.ராஜராஜன், எம்.சங்கரன். ஜெ.ஆசிர் பாக்கியராஜ். மு.வனிதா உள்ளிட்டோருக்கு பாராட்டு நடைபெற்றது.