முன்னேற்றமே நமது இலக்கு- பிரதமர் மோடி

பிரதமர் மோடி 77-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றினார்.

பிரதமர் மோடி உரையின் முக்கியம்சங்கள்:- * இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி பாராட்டும் வகையில் உள்ளது. * வளர்ந்த நகரங்கள் மட்டுமல்லாமல் சிறிய நகரங்களில் கூட டிஜிட்டல் வளர்ச்சி உள்ளது. * நாட்டின் கனவுகளை நனவாக்குவதற்கான திறன் நம்மிடம் உள்ளது. * சிறிய நகரங்களின் இளைஞர்கள் கூட தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என காட்டியுள்ளனர். * இன்றைய உலகம் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பற்றி உலகம் தெரிந்து கொள்ள விரும்புகிறது. அறிவியல் ஆராய்ச்சி குறித்த சாதனைகளிலும் நமது இளைஞர்கள் சிறந்து விளங்குகின்றனர்.

* நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுத்துள்ள விவசாய பெருமக்களுக்கு நன்றி. * நாட்டின் வளர்ச்சிக்கு உடல் உழைப்பு தொழிலாளர்களின் பங்கெடுப்பு மிகவும் முக்கியம். * இந்தியாவின் உயர்வு, வளர்ச்சி நமது நாட்டின் மீதான உலகத்தின் நம்பிக்கையை உயர்த்தியுள்ளது. * விழிப்புணர்வுதான் வன்முறைகளில் இருந்து நமக்கு விடுதலை தருகிறது. * இளையோர் சக்தியால் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. மக்களுக்கு நாட்டின் மீதுள்ள நம்பிக்கைதான் உலகிற்கு நம் நாட்டின் மீதான நம்பிக்கை தருகிறது. * இந்தியா நவீனத்துவத்தை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறது.

ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்கும் உன்னத வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. மிகப்பெரிய இலக்கினை நாம் அடையப் போகிறோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜி-20 கூட்டம் நடத்தப்படுகிறது. * இன்று நாட்டின் ஏற்றுமதி வேகமாக அதிகரித்து வருகிறது. * உலகளவில் புதிய அரசியல் சூழல் உருவாகி வருகிறது. மாறிவரும் சூழலில் நம் 140 கோடி மக்களின் திறமை உற்று நோக்கப்படுகிறது. * நமது வளர்ச்சி நமது கூட்டு நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது. * உலகளவில் முன்பிருந்த நிலைமைகள் மாறிவிட்டன. * நாட்டின் ஒவ்வொரு பகுதியும் சமமாக வளர்ச்சியடைவதே சரியான முன்னேற்றம் * அனைவருக்குமான அனைத்து பகுதிகளுக்குமான முன்னேற்றமே நமது இலக்கு * புதிய இந்தியா தடுக்க முடியாதது, வெல்ல முடியாதது.