விலைவாசி உயர்வை கண்டித்து சென்னையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்





காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைநகரங்களில் நடந்தது. சென்னை மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடந்த கண்டன போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். போராட்டத்தின் போது விலைவாசி உயர்வுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் கழுத்தில் காய்கறிகளை மாலையாக அணிந்தபடி கோஷமிட்டனர். தக்காளி விலை ஏற்றத்தை குறிக்கும் வகையில் பதாகைகளை ஏந்திய படி, தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அ.தி.மு.க. ஆட்சியில் தக்காளி விலை ஏற்றத்தின் போது அரசே கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு அரசு குறைந்த விலையில் வழங்கியதை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் பேசினர்.

போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், கமலக்கண்ணன், முன்னாள் எம்.பி.க்கள் ஜெயவர்த்தன் எஸ்.ஆர்.விஜயகுமார், சங்கரதாஸ், சசிரேகா, செய்தி தொடர்பாளர் சத்யன், மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை ரவி, ஆதி ராஜாராம், வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், வேளச்சேரி அசோக், தி.நகர் சத்யா, கே.பி.கந்தன், முன்னாள் கவுன்சிலர் பி.சின்னையன் (எ) ஆறுமுகம், வடபழனி சத்திய நாராயண மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, மற்றும் பேரவை மாநில துணைச் செயலாளர் வேளச்சேரி எம்.ஏ.மூர்த்தி, இணைச் செயலாளர் டாக்டர் சுனில், பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், வக்கீல் பழனி, தென் சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சாமிநாதன், கடும்பாடி எ.எம்.காமராஜ், சி.கே.முருகன், சுகுமார், ஷேக் அலி, எஸ்.எம். சரவணன், இனியன், கதிர் முருகன், எம்.ஜி.ஆர்.நகர் குட்டி, மார்க்கெட் சுரேஷ், வசந்த குமார், வைகுண்டராஜன், மற்றும் வக்கீல் சதாசிவம், வில்லிவாக்கம் பகுதிச் செயலாளர் திருமங்கலம் மோகன், கொளத்தூர் முன்னாள் பகுதிச் செயலாளர் கொளத்தூர் கணேசன், அபிராமி பாலாஜி, சேத்பேட் சம்பத்குமார், கன்னியப்பன், மாரிமுத்து, பாலாஜி, தசரதன், நித்யா, சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தினால் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் சாலை அ.தி.மு.க. தொண்டர்களால் நிரம்பியது.

ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்டம் சார்பில் மதுரவாயல் மின்சார அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைப்பு செயலாளரும், மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் பி.வி.ரமணா, மாதவரம் மூர்த்தி, சிறுனியம் பலராமன், முன்னாள் எம்.எல்.ஏ. அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் அமைச்சர் அப்துல்ரகீம், இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் இ.சி.சேகர், முன்னாள் எம்.பி. திருத்தணி அரி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மணிமாறன், குப்பன், இளைஞர் அணி மாநில இணைச் செயலாளர்கள் இன்பராஜ், துண்டல் பாபு, ஜாவித் அகமது, எஸ்.பி.ஆர். கிஷோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.