நாடாளுமன்ற தேர்தலில்
அதிமுக தலைமையில் தான் கூட்டணி… பாஜகவிற்கு எத்தனை தொகுதி என்பதில் அதிமுகவே இறுதி முடிவு
சென்னை: சிலம்பு செல்வர் ம.பொ.சி-யின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர்; நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பதை அதிமுகவே முடிவு செய்யும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அடுத்த தலைமுறை விஜய் தான் என்றும் அவர் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை எனவும் செல்லூர் ராஜு கூறிய கருத்து குறித்து ஜெயகுமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார் பெருமை, சகிப்பு தன்மை, அவமானத்தை கையாளும் திறன் உள்ள யாரும் அரசியலுக்கு வரலாம் என்றும் செல்லூர் ராஜுவிடமே அவர் கூறிய கருத்து குறித்து கேட்டு சொல்வதாகவும் தெரிவித்தார்.