அம்பேத்கர் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, தலைவர்கள் மாலை அணிவிப்பு
புதுச்சேரி: புதுவை அரசு சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பாரதி பூங்காவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சந்திரபிரியங்கா, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ. ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் உள்ள அவரின் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.