மத்திய அரசின் என்.எம்.எம்.எஸ். தேர்வில் 11,385 மாணவர்கள் பங்கேற்கிறார்கள்




சேலம்: நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் இடை நிற்றலை தடுக்கவும், நலிவ டைந்த பிரிவை சேர்ந்த மாண வர்களுக்காகவும், கல்வியில் சிறந்து விளங்கவும் பல்வேறு கல்வி உதவித் திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் (என்.எம்.எம்.எஸ்) இந்திய அரசு கல்வி அமைச்சகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.48 ஆயிரம் ஆண்டுதோறும் இத்திட்டத்தின்படி நடத்தப்ப டும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ- மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் தலா ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கப்படும். தேர்வு எழுதும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அடுத்த 4 ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.48 ஆயிரம் உதவித்தொகை கிடைக்கும். அதாவது ஒவ்வொரு வருடமும் ரூ.12 ஆயிரம் வீதம் மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

நாளை மறுநாள் தொடங்குகிறது நடப்பாண்டிற்கான தேர்வு நாளை மறுநாள் 25-ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டது. சேலம் மாவட்டத்தில் இத்தேர்வினை எழுத 11, 385 மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர். இந்த என்.எம்.எம்.எஸ். தேர்வானது, மனத்திறன் தேர்வு மற்றும் படிப்பறிவுத்திறன் தேர்வு என இரு பகுதிகளை கொண்டதாகும். மாணவர்க ளின் பகுப்பாய்வுத்திறன், காரணம் அறியும் திறன், சிந்திக்கும் திறன், எண்ணியல் திறன்போன்றவற்றை சோதித்து அறிவது, மனத்திறன் தேர்வாகும்.

இதேபோல் மாணவர்கள் பாடப்பொருளில் பெற்றுள்ள அறிவை சோதித்து அறிவதாக படிப்பறிவுத்திறன் தேர்வு அமைகிறது. இத்தேர்வில் கணிதம், அறிவியல், மற்றும் சமூக அறிவியல் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். 47 மையங்களில்… இந்த தேர்வை சேலம் மாவட்டத்தில் 47 மையங்க ளில் நடத்த ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது. அன்று காலை 9.30 மணி முதல் காலை 11 மணி வரை மனத்திறன் தேர்வும், 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை படிப்பறிவுத் திறன் தேர்வும் நடக்கிறது. இந்த தேர்வுக்கான பணிகளில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.