ஆத்தூரில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்- எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு


ஆத்தூர்: தமிழகம் முழுவதும் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர். இளங்கோவன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலையை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட , நகர, ஒன்றிய, வார்டு நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் பங்கேற்று தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழு