தொண்டர்களும், நிர்வாகிகளும் உறுதியாக இருந்தால் எதிரிகளை வீழ்த்துவது எளிது - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்சென்னை: அ.தி.மு.க.வின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள், செய்தி தொடர்பாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை கழகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மக்களவை தேர்தலுக்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும். மக்கள் பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வாக்குசாவடி அளவில் அ.தி.மு.க.வை வலுப்படுத்த வேண்டும். ஓ.பி.எஸ். பணத்தைக் கொடுத்து கூட்டத்தைக் கூட்டியுள்ளார். தி.மு.க.வின் பி டீமாக ஓ.பி.எஸ். செயல்படுகிறார். கூட்டணி பேச்சுவார்த்தையை தலைமை பார்த்துக் கொள்ளும். எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடம் என்பதை அ.தி.மு.க முடிவு செய்யும். அ.தி.மு.க தலைமையில்தான் மெகா கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளோம். அ.தி.மு.க.வை பா.ஜ.க எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தியதில்லை. இதை செய்யுங்கள், அதை செய்யுங்கள் என எப்போதும் பா.ஜ.க. வற்புறுத்தியதில்லை. தொண்டர்களும், நிர்வாகிகளும் உறுதியாக இருந்தால் எதிரிகளை வீழ்த்துவது எளிது என தெரிவித்தார்.