அரசியலில் வன்னியர்கள்
வஞ்சிக்கப்படுவது ஏன்..?
வஞ்சிக்கப்படுவது ஏன்..?
பொதுவாக வன்னியர்களை எந்த ஒரு அரசியல் கட்சியும் எந்த ஒரு சாதி அமைப்புகளும் பாரபட்சமாகவே பார்ப்பது ஏன்? அதுமட்டுமல்ல மதிப்பு குறைவாக மதிப்பீடுவது ஏன்? இதுமட்டும் அல்ல வன்னியர்கள் என்றால் அலட்சியமாக பேசுவதும் பார்ப்பதும் வாடிக்கையான ஒன்றாக ஆகிவிட்டது. எந்த உயரத்தில் இருந்தாலும் ஓ நீ அவனா? என்ற நிலையில் பார்க்கிறார்கள். இதுபோன்ற அவல நிலைக்கு இந்த சமுதாயம் ஆளாக வேண்டிய அவசியம் என்ன? அதற்கு என்ன காரணம்? யார் காரணம்? என்பதை சீர் தூக்கி பார்க்கும் பொழுது அரசியல்வாதிகளின் ஆதிக்கமும் பிற சமுதாய சங்கங்களின் ஒற்றுமையும், வன்னியர்கள் ஒற்றுமை இல்லாமையும் ஒரு காரணம். இரண்டாவது காரணம் அரசியலில் வன்னியர்கள் ஆளுமைமிக்கவர்களாக இல்லாததும் ஒரு காரணம். மூன்றாவதாக நாம் இருக்கும் இடத்தில் ஆதிக்கம் செலுத்தும் போது தாம் பிறந்த சமுதாயத்தை குறைத்து மதிப்பீட்டு அரசியலில் அதிகாரத்தை கைப்பற்ற திட்டமிடல் இல்லாமை குறிப்பாக அண்டி பிழைக்கும் வாழ்க்கை வளர்ந்து விட்ட வன்னியர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் நிலவி வருகிறது என்பதும் ஒரு காரணம்.
இதனால் தினசரி கூலி வேலை செய்து குடும்பம் நடத்த வேண்டிய நிலையில் வசிக்கின்ற லட்சக்கணக்கான வன்னியர்கள் படிப்பறிவு இல்லாமலும் சுயதொழில் செய்யாமலும் வாழவேண்டிய கட்டாயத்தில் இருப்பதினால் பணக்கார வன்னியர்கள் அடுத்தவர்களுக்கு பணிந்து போவதினால் அவர்கள் தொழிலையும் பாதுகாத்து கொள்கிறார்கள். வருமானத்தையும் பெருக்கி கொள்கிறார்கள். ஆனால் ஏழைகளாய் இருப்பவர்கள் யார் காலில் விழுந்தாலும் பாரவாயில்லை தங்கள் அன்றாட வாழ்விற்கு வழி கிடைக்குமா என்று ஏங்குகிறார்கள். மூன்று வேளை உணவுக்கும் பசி, பட்டினியில் இருந்து விடுபடுவதற்கும் குழைந்தைகளை பாதுகாப்பதற்கும் அரசியல்வாதிகளுக்கு விலைப்போவதற்கும் தயாராகி விடுகிறார்கள். இந்த நிலைகளை மாற்றுவதற்கு என்னவழி என்று யோசித்து பார்க்கும் பொழுது இதுவரை இந்த சமுதாயத்தில் தோன்றிய பல தலைவர்களுக்கும் விடை கிடைக்கவில்லை. எதிரிகளின் சூழ்ச்சியும், சதியும் அறிந்து புரிந்து செயல்படவும் தெரியவில்லை. இதனால் வன்னியர் சமுதாயம் விட்டில் பூச்சிகள் போல் அரசியல்வாதிகளிடம் வீழ்ந்து மடிந்து விலைபோக வேண்டிய கட்டாயத்தில் வாழ்கிறார்கள்.
பணக்கார வன்னியர்களோ இதுபோன்ற நிகழ்ச்சிகளை பார்த்தும் பாரா முகமாய், கேட்டும் செவிமடுக்காமல் செல்வந்தர்களாய் வாழ்கிறார்கள். அவர்களும் அரசியல்வாதிகளிடம் அடிமைகளாகவே வாழ விரும்புகிறார்கள். தங்கள் சுயலாபத்திற்காக எந்த ஒரு சமுதாயம் வளர்ச்சி அடைந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பும், பக்கபலமாகவும் அவரவர் சார்ந்த சமுதாய மக்கள் அரசு பணிகளிலும் காவல்துறை, நீதித்துறை, அரசியலில் அதிகாரம் மிக்க பணிகளில் இருப்பவர்கள் தங்கள் சமுதாயத்தை பாதுகாத்து கொள்கிறார்கள். தங்கள் சமுதாயத்திற்கு இழுக்கு ஏற்பட்டால் விரைந்து சென்று அதை தடுத்து நிறுத்துகிறார்கள். ஆனால் வன்னியர் சமுதாயத்திற்கு இழுக்கு ஏற்படும் போதெல்லாம் பின்னுக்கு தள்ளப்படும் பொழுதெல்லாம், புறக்கணிக்கப்படும்போதெல்லாம் சிறியவர் முதல் பெரியவர் வரை இது சாபக்கேடு என்று கூறி தாங்களும் ஆறுதல் அடைகிறார்கள். தங்கள் சமுதாயத்தை சார்ந்தவர்களையும் அமைதி காக்கும்படி -கூறுகிறார்கள். இப்படி தான் கடந்த 60 ஆண்டு காலமாக திராவிட கட்சிகள் ஆட்சியில் இந்த சமுதாய மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் சுட்சமேன தூக்கியெறியப்பட்டு, கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உரிமைகள் பறிக்கப்பட்டு, உதாசீனப்படுத்தும் போதெல்லாம் வன்னியர்கள் அமைதியாகவே வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக வன்னியர்கள் வாழ்க்கையில் ஒளிக்கீற்று தோன்றும்போதெல்லாம் அந்த வெளிச்சத்தை மறைப்பதற்கு இரும்பு திரைப்போட்டு மறைப்பதற்கு ஆயிரம் பேர் ஓடிவருகிறார்கள். ஆனால் அந்த வெளிச்சத்தை பாதுகாப்பதற்கும் அதன் அருகில் ஒரு அகல் விளக்கை ஏற்றி வைத்து வெளிச்சத்தை தருவதற்கும் ஒரு வன்னியர்கள் கூட முன்வருவதில்லை என்பது வேதனை தருகிறது. இந்த அவல நிலையை போக்கிட பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்திடவும் அவர்களை நல்வழிப்படுத்திடவும் ஒரு தலைவன் இல்லாமல் இருப்பதும் இருப்பவர்கள் எல்லாம் தங்களை மட்டும் பாதுகாத்து கொள்வதும் ஏன் என்ற கேள்வியாகவே தொடர்கிறது. அரசியல் மாற்றம் என்பது மக்களின் மனதில் ஏற்படக்கூடிய மாற்றத்தினால் மட்டுமே உருவாக கூடியது. அது அந்த வாய்ப்பு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏழை பணக்காரன் என்றாலும் ஆளுக்கு ஒரு ஒட்டு என்ற அடிப்படையில் வாக்களிக்கலாம் தங்கள் எதிரிகளை தோற்கடிக்கலாம். அதன் மூலம் தங்கள் வாழ்க்கையில் ஒளிமயமான எதிர்காலத்தை தேடிச்சென்று பயணம் செய்யலாம். அந்த நாள் வரும்வரை காத்திருந்து வாய்ப்புகளை பயன்படுத்துங்கள். வாழ்க்கையில் முன்னெறுங்கள். நம்பிக்கை வளரட்டும், நம் கைகள் உயரட்டும். உங்களுக்காக பேசுகிறேன், உங்களோடு பேசுகிறேன்.
- பெருந்தமிழன்