காட்பாடியில் ராணுவத்தில் சேர
ஆர்வத்துடன் குவிந்த பெண்கள்



வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த 15-ந் தேதி முதல் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடந்து வருகிறது. ஆண்களுக்கான ராணுவ தேர்வு முகாம் நடந்தது. இதில் உடற்தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்ட தேர்வுக்கு தேர்வாகி உள்ளனர். பெண்களுக்கான ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் தொடங்கியது. இதில் தமிழகம், ஆந்திரா தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்று வருகின்றனர். முதல் நாளான நேற்று நடந்த முகாமில் காலை முதல் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். நள்ளிரவு 12 மணிக்கு உயரம் அளவீடு செய்யப்பட்டது. பின்னர் சான்றிதழ் சரி பார்க்கப்பட்டு மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஓட்டம் விடப்பட்டு பல்வேறு உடல் தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டது. 2-வது நாளாக இன்றும் பெண்களுக்கான ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடந்தது.‌ நள்ளிரவு முதலே ஏராளமான பெண்கள் மைதானத்தில் குவிந்திருந்தனர். பெண்களுக்கான முகாம் நாளையுடன் முடிவடைகிறது.