தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூல் சாதனை செய்த பொன்னியின் செல்வன்



மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 30-ம் தேதி வெளிவந்த படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், நாசர், ஐஸ்வர்யாராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தன. பொன்னியின் செல்வன் இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் தமிழக வசூல் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை ரூ.100 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உலகம் முழுவதும் இப்படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.