அரசிடமே மருத்துவக்கல்லூரி கட்டணம் செலுத்தலாம்: மருத்துவக்கல்வி இயக்குநர் அறிவிப்புசென்னை: இந்த ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மொத்த கட்டணத்தையும் அரசிடமே செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவ கல்லூரிகள், பெற்றோர்களிடம் அதிக பணம் வசூலிப்பதை தடுக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி கல்லூரியில் கட்டணத்தை செலுத்த தேவையில்லை எனவும் மருத்துவக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.