என் அடுத்த படம் இந்த ஜானரில் அமையும் - இயக்குனர் ராஜமவுலிதெலுங்கில் முன்னணி இயக்குனர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் தனது அடுத்த படத்தில் நடிகர் மகேஷ் பாபுவுடன் இணையவுள்ளார். ஆர். ஆர். ஆர். படத்தின் வெற்றிக்கு பிறகு மகேஷ் பாபு படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் இயக்குனர் ராஜமௌலி ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், இவர் அமெரிக்காவில் நடக்கும் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராஜமௌலி, "தான் இயக்கும் அடுத்த படம் ஆக்‌ஷன், அட்வென்ச்சர் ஜானரில் இருக்கும். இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார். மகேஷ் பாபு தற்போது இயக்குனர் திரிவிக்ரம் இயக்கத்தில் நடித்து வருகிறார், எஸ்.எஸ்.எம்.பி. 28 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் துவங்கி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் ராஜமவுலி படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.