மகனுக்காக ஒன்று சேர்ந்த தனுஷ் - ஐஸ்வர்யாநடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் தனுஷும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் நாள் திருமணம் செய்துக் கொண்டனர். மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் யாத்ராவுக்கு 15 வயது ஆகிறது. தனுஷ் - ஐஸ்வர்யா சமீபத்தில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்யப்போவதாகவும், இனிமேல் இருவரும் தனித்தனி பாதைகளில் பயணிக்கப்போவதாகவும் அறிவித்த்திருந்தனர். விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் தனுஷ் பெயரை தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றியிருந்தார். ஐஸ்வர்யா இந்நிலையில் இருவரின் பிரிவிற்கு பிறகு மூத்த மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சிக்கு முதல் முறையாக இருவரும் ஒன்றாக வந்தனர். இவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்று எதிர்ப்பார்த்திருந்த ரசிகர்களுக்கு தனது மகனுக்காக இருவரும் ஒன்று சேர்ந்திருப்பதை ரசிகர்கள் வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர்.