திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லாமல் கலைஞர் சிலை திறப்பு விழா-..! திருவண்ணாமலையில்..!திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றைய தினம் கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கலைஞர் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களோடு 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் பயணத்தில் பங்கெடுத்து அவருக்கு உற்ற நண்பனாக நம்பிக்கைக்குரிய தளபதியாக உடன் இருந்து வந்தவர் திமுகவின் பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள். கலைஞரின் விருப்பத்திற்கேற்ப தனது பேச்சு திறமையால் நகைச்சுவை உணர்வோடு கலைஞரை மகிழ்வித்து மகிழ்வதில் பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களுக்கு ஈடாக, இணையாக திமுக வில் துரைமுருகனை தவிர வேறுஒருவர் இல்லையென்றே கூறலாம். அந்த அளவிற்கு நட்புடன் கலைஞரின் குடும்ப உறுப்பினராகவே திகழ்ந்தவர்.

ஆனால் கலைஞர் கருணாநிதி சிலை திறந்து விழா, திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற பொழுது அந்த நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் என்ற முறையில் துரைமுருகன் பங்கேற்கவில்லை என்பது என்ன காரணம் என்பதை கழக உடன்பிறப்புகள் கேள்வி எழுப்புகிறார்கள். மாவட்ட செயலாளர் என்ற முறையில் அமைச்சர் ஏ.வா.வேலு மற்றும் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் மஸ்தான் போன்றவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- டெல்லிகுருஜி