வீரன் அழகு முத்துகோன்…! தியாக வரலாறு!



ஆங்கிலேயரை எதிர்த்த முதல் தமிழ் விடுதலை போராட்ட வீரர் அழகு முத்து கோன். இவரது வரலாறு மற்றும் விடுதலை போராட்டம் பற்றி தமிழர்களுக்கே கூட சரிவர தெரியாது. ஆங்கிலேயர் கிழக்கு இந்திய கம்பெனியாளர்களுக்கு கப்பம் கட்டு மறுத்து முதன் முதலாக ஆங்கிலேயரை எதிர்த்தவர் கட்டாலங்குளம் அரசரான வீரர் அழகு முத்துகோன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேய படை தளபதியான லுசுகான்சாகிப்பை எதிர்த்து பெத்தநாயக்கன் கோட்டையில் போரிட்டு அதில் வீரன் அழகு முத்துகோன் மற்றும் ஆறுபடை தளபதிகளும் 248 போர் வீரர்களும் பீரங்கி வாயில் வைத்து சுடப்பட்டு இறந்தனர். பீரங்கி முன் நின்ற சாகும் தருவாயிலும் தன்னை சேர்ந்தவர்களை காட்டி கொடுக்கமாட்டேன் என்று கூறிய நெஞ்சுரம் மிக்கவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அழகு முத்துகோனின் வரலாற்றில் அவருடைய பிறந்த தினம் குறிப்பிடப்படவில்லை. இன்றும் கட்டாலங்குளத்தில் வீரன் அழகு முத்துகோன் வாரிசுகள் வாழ்ந்து வருகின்றன. அவர்களால் இன்றைய தினம் அழகு முத்துகோனுக்கு குரு பூஜை விழா நடத்தப்படுகிறது. ஜுலை 11, 1710 அவரது பிறந்த நாளாக இருக்கலாம். வீரத்தின் அடையாளம் அழகு முத்துகோன்.

இன்றை அரசியல்வாதிகளோடு ஒப்பிட்டு பார்க்கும் பொழுது ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்து பதவி பெறுவதையும், அரசியல் செய்வதையும் பார்க்கும் பொழுது பீரங்கி முன் நிறுத்தப்பட்டு தான் சாகப்போகிறோம் என்கின்ற பொழுது கூட நண்பர்களை காட்டிக் கொடுக்காமல் தன் உயிரை துறந்த மாவீரன் அழகு முத்து கோன் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சிலை சென்னை எழும்பூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

- டெல்லிகுருஜி