2 நாள் பயணத்தை முடித்து பிரதமர் மோடி புறப்பட்டார்- மு.க.ஸ்டாலின்
வழியனுப்பி வைத்தார்



சென்னை: பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சென்னை வந்தார். சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற 'செஸ்' ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்று போட்டியை தொடங்கி வைத்தார். அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார். அதன் பிறகு கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று தங்கினார். இன்று காலையில் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிறகு நண்பகல் 12 மணியளவில் சென்னை விமான நிலையம் சென்றார். கவர்னர் ஆர்.என்.ரவியும் அவரும் ஒரே காரில் விமான நிலையம் சென்றனர். அங்கு பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செஸ் போர்டை நினைவுப் பரிசாக வழங்கி வழியனுப்பி வைத்தார். அவருடன் பொன்முடி, எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்களும் வழியனுப்பி வைத்தனர். தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம், ஜி.கே.வாசன் ஆகியோரும் வழியனுப்பி வைத்தனர். பின்னர் பிரதமர் மோடி தனி விமானத்தில் அகமதாபாத் புறப்பட்டு சென்றார்.