டெல்லி பள்ளிகளில் செயல்படுத்தப்பட்ட மகிழ்ச்சி பாடத்திட்டம் பலரது வாழ்க்கையை மாற்றி உள்ளது- அரவிந்த் கெஜ்ரிவால்தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்காக மகிழ்ச்சிக்கான நிகழ்ச்சி என்ற பெயரில் பாட வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அரசு சார்பில் கடந்த 4 வருடங்களாக செயல்படுத்தப்பட்ட இந்த வகுப்புகளில் 18 லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது அரங்கில் கூடியிருந்த பள்ளி ஆசிரியர்களுடன் சேர்ந்து டிரம்ஸ் வாத்தியத்தை இசைத்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.