வெற்றி வெற்றி மேல் எடப்பாடி பழனிசாமி..!வரும் திங்கட்கிழமை (11.07.22) அதிமுகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதினால் அந்த கூட்டத்தில் கட்சியை நிர்வகிக்கும் தலைமை பொறுப்பும் கட்சியின் ஒட்டுமொத்த அதிகாரமும் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தற்காலிக பொதுச்செயலாளராக முழு அதிகாரம் படைத்த பொதுச்செயலாளர் பொறுப்பு எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்படலாம் என்பதை அறிந்துக்கொண்ட தமிழக அரசு அவரது ஆதரவாளர்களான பலரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையும், வருவாய் துறையினரும் சோதனை என்ற முறையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது எடப்பாடி பழனிசாமிக்கு கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. இதனால் பொதுக்குழுவை தள்ளிவைத்து அதன் மூலம் ஒ.பன்னீர்செல்வம் ஆதாயம் அடைவதற்காக ஒருசிலர் முயற்சி செய்கிறார்களோ என்கின்ற சந்தேகம் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு ஏற்பட்டிருப்பதால் எந்த சூழ்நிலையிலும் மனம் தளர்ந்து விடாமல் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வெற்றிப்பெற வேண்டும் என்ற முனைப்புடன் எடப்பாடியின் ஆதரவாளர்களும் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களும் இறுதிவரை உறுதியோடு நின்று எடப்பாடி பழனிசாமிக்கு முழு ஆதரவு வழங்கிட வேண்டும் என்று களத்தில் உறுதியாக நிற்கிறார்கள். இதற்கு ஏற்றாற்போல் எல்லாவித பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தனியார் செக்ருட்டிகளையும் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளதாக கூறுகிறார்கள்.

இதன் மூலம் ஒ.பி.எஸ் தரப்பினர் கலவரம் செய்ய ஈடுபட்டால் அதனை சட்டரீதியாக முறியடிப்பதற்கு ஏற்ற வகையில் முழு பாதுகாப்பு ஏற்பாட்டினையும் செய்துள்ளார்களாம்.

- டெல்லிகுருஜி