என்ன தவறு செய்தேன் ஒ.பன்னீர்செல்வம்..!
இதயமே இல்லாதவரா எடப்பாடி பழனிசாமி..!
ஆதரவாளர்களிடத்தில் புலம்பல்…!



இரட்டை தலைமை ஏற்பட்டப் பிறகு அல்லது ஒற்றை தலைமை இருந்த பொழுதும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நான் என்ன தவறு செய்தேன். என் உடன்பிறந்த சகோதரர் ஒ.ராஜாவை கட்சியிலிருந்து நீக்குவதற்கும் 35 ஆண்டு காலம் ஜெயலலிதாவோடு உடன் இருந்து உடன் பிறவா சகோதரியாக அம்மாவால் அறிவிக்கப்பட்ட சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் கட்சியிலிருந்து முற்றிலும் நீக்குவதற்கும் எடப்பாடி பழனிசாமி கடிதத்தை நீட்டிய போதெல்லாம் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் உடனடியாக கையெழுத்தைப் போட்டேன். இப்படி இன்னும் பலரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்த போதெல்லாம் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் அறிவிப்பு கடிதத்தில் கையெழுத்திட்டேன். துணை முதல்வராக நான் பதவி வகித்த பொழுது அதிகாரிகளை பயன்படுத்தி என் அலுவலக கோப்புகளை கூட எனக்கு அனுப்புவதற்கு வேண்டாம் என்றும் கால தாமதத்தோடும் கோப்புகளை அனுப்பும்படி அதிகாரிகளிடத்தில் முதல்வர் அலுவலகத்தில் இருந்தும் உத்தரவுகளை போட்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி. இதை என்னிடம் என் துறை சார்ந்த அதிகாரிகள் எடுத்துக் கூறிய பொழுதும் நான் அமைதியாகவே எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இத்தகைய செயலை கண்டிக்கின்ற விதமாக முதல்வரின் கவனத்திற்கு கூட நான் கொண்டு சென்றதில்லை. காரணம் என்னால் கட்சியில் இன்னொருமுறை பிளவும், ஆட்சிக்கு ஆபத்தும் வந்துவிட கூடாது என்று எல்லாவிதமான அவமானங்களையும், புறக்கணிப்புகளையும் பொறுத்துக் கொண்டிருந்தேன்.

குறிப்பாக ஒருமுறை வேலுமணி வீட்டிற்கு சென்று வேலுமணியை நேரில் சந்தித்து நேரில் பேசினேன். இப்படி எல்லா வகையிலும் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும், அதிமுக கழகத்திற்கும் இதயப்பூர்வமான ஆதரவினை இதய சுத்தியோடு வழங்கி வந்தேன். இப்படியெல்லாம் இருந்த நான் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் குறித்து சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய பொழுது சபையின் மரபு குறித்து மாண்பை காக்குகின்ற வகையில் கடந்தகால வரலாறை நினைவுக் கூர்ந்து என் தந்தையார் கருணாநிதி மீது வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் குறித்து ஓரிரு வார்த்தைகள் அவை குறிப்பில் பதிவு செய்தேன். அது மட்டுமல்லாமல் தொகுதி மேம்பாடு குறித்து என் மகன் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து தொகுதி மேம்பாடு குறித்து கோரிக்கை மனுவை வழங்கினார். அப்பொழுது பத்திரிகையாளர் மத்தியில் பேசும் பொழுது ஆட்சியின் நிலை குறித்து கேள்வி எழுப்பிய பொழுது ரவீந்திரநாத் மனதில் பட்டதை பத்திரிகையாளர் சந்திப்பில் பகிர்ந்துக் கொண்டார்.

இவற்றையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு நான் திமுகவினர்களுடன் நெருங்கி பழகுவதாகவும் முதல்வரோடு தொடர்பு வைத்துக் கொண்டு கட்சிக்கு துரோகம் செய்வதாகவும், கதை கட்டுகிறார்கள். அதிமுக கழகத்திற்கும் என்னை இரண்டு முறை முதல்வராக்கிய அம்மா ஜெயலலிதா அவர்களுக்கு விசுவாசமாகவும், கட்சியின் ஒற்றுமைக்காகவும் சசிகலா நடராஜனுக்கு எதிராகவும், இரட்டை இலையை முடக்கிவிட கூடாது என்ற உயர்ந்த நல்ல எண்ணத்துடனும் கட்சி இரட்டை தலைமை தொடர வேண்டும் என்-று விரும்புகின்றேனே தவிர இரட்டை தலைமை இருக்கும் பொழுது கூட ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி செயல்படுவதற்கு நான் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் கொடுத்து வந்துள்ளேன். உதாரணத்திற்கு முதலமைச்சர் வேட்பாளராக யார் வரவேண்டும் என்ற கேள்வி எழுந்த பொழுது எடப்பாடி பழனிசாமி தான் என்று முடிவு செய்த பொழுது அதற்கு ஆதரவு அளித்தேன்.

எதிர்கட்சி தலைவர் பதவியை யார் பெறுவது என்ற சட்டமன்ற உறுப்பினர்கள் விருப்பத்திற்கேற்ப அதற்கும் நான் சம்மதம் தெரிவித்தேன். எடப்பாடி பழனிசாமியே எதிர்கட்சி தலைவராக இருக்க சம்மதித்தேன். நான் கட்சியை விட்டு வெளியேறி மௌன யுத்தம் நடத்திய பொழுதும் பிறகு மீண்டும் அதிமுகவில் என்னை இணைத்துக் கொண்ட பொழுதும் நமக்குள் ஏற்பட்ட ஒப்பந்த்தின்படி எடப்பாடி பழனிசாமி அவர்களும் பேச்சுவாக்கில் பங்கேற்றவர்களும், நன்றாக தெரியும். எத்தகைய ஒப்பந்தத்தை நான் இருவரும் செய்துக் கொண்டோம் என்று முதல்வராக எடப்பாடி தொடரட்டும் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து பேசி முடிவெடுப்போம் என்று ஒப்பந்தம் செய்துக் கொண்டேன் என்று இன்றுவரை எவருக்கும் தெரியாத ரகசியத்தை காத்துவந்தேன். இவற்றையெல்லாம் மூடி மறைத்துவிட்டு தொண்டர்களின் மனோநிலையையும் எண்ண ஓட்டங்களையும் புரிந்துக் கொள்ளாமல் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் கட்சியின் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரையும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான நிலையில் இருப்பதாக கருதிக் கொண்டு பொதுக்குழு கூட்டத்தில் என்னை அவமானப்படுத்துகின்ற ஒற்றை தலைமை குறித்துப் பேசி நான் தானாக வெளியேற வேண்டும் என்ற சூழ்நிலையை உருவாக்கி இன்றைக்கு கட்சியில் ஒரு பிளவை உருவாக்கி கொண்டு சென்றது எடப்பாடி பழனிசாமி தான் தவிர ஒ.பன்னீர்செல்வம் இல்லை என்பதை லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்களுக்கு பகிரங்கமாக நான் தெரிவித்துள்ள விரும்புகின்றேன் என் அடிப்படையில் இன்றைக்கு ஒ.பன்னீர்செல்வம் கண்ணீருடன் தனக்கு எடப்பாடி செய்த துரோகங்களையும், அவமானங்களையும் தன்னை சந்திக்க வருகின்றவர்களிடம் பேசி நியாயம் கேட்கும் விதமாக நான் என்ன தவறு செய்தேன் அது தான் எனக்கும் புரியவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். தனது புலம்பலை பிரதமர் மோடி, அமிர்ஷா அவர்களுக்கும் தெரியப்படுத்தியதோடு இன்றைக்கும் அமைதியாகவே இருக்கிறேன். எதிர்காலத்தில் எது நடந்தாலும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்கிறாராம் ஒ.பன்னீர்செல்வம். மேலும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்த முடியும் என்ற அசைக்க முடியாத நட்பிக்கையுடன் காத்து இருக்கிறார் ஒ.பன்னீர்செல்வம்.

“என்ன தவறு செய்தேன், வந்து பிறந்துவிட்டேன் வாழ தெரியவில்லை” என்ற சினிமா பாடலை நினைத்து ஆறுதல் அடைகிறார் ஒ.பன்னீர்செல்வம்.

- டெல்லிகுருஜி