ஆஸ்கர் கெளரவம் பெற்ற சூர்யா.. வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்..



திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் உலகம் முழுவதும் இருந்து நான்காயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். ஆண்டு தோறும் ஆஸ்கர் கமிட்டியின் உறுப்பினர் விவரம் மாறுபடும். இதைத்தொடர்ந்து, 2022-ம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களுக்கான அழைப்பு 397 பேருக்கு விடுக்கப்பட்டிருந்தது. இதில் இந்தியாவில் இருந்து நடிகர் சூர்யா, நடிகை கஜோல் ஆகியோர் ஆஸ்கர் குழுவில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா மற்றும் கஜோலுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், தென்னிந்தியாவில் இருந்து ஆஸ்கர் பேனலுக்கு செல்லும் முதல் நடிகர் என்ற சிறப்பை சூர்யா பெற்றுள்ளார். நடிகர் சூர்யாவை பாராட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.