ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக
ஆய்வு செய்ய அமைக்கப்பட்டகுழுவுக்கான அரசாணை வெளியீடு




சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக விரைவில் அவசர சட்டம் கொண்டு வரப்படுகிறது. இது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது. அதில் ஆன்லைன் விளையாட்டுகள் தற்கொலையை தூண்டுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ஆன்லைன் விளையாட்டுகள் உண்மையிலேயே திறன்களை வளர்க்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.