கல்வியாண்டின் இடையே வயது முதிர்வால் ஓய்வுபெறும் ஆசிரியர்களை மறுநியமனம் செய்ய தமிழக அரசு அனுமதி
சென்னை: கல்வியாண்டின் இடையே வயது முதிர்வால் ஓய்வுபெறும் ஆசிரியர்கள் நிபந்தனையின் பேரில் மறுநியமனம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மறுநியமனம் செய்ய ஆசிரியர்களின் பண்பு, நடத்தை திருப்திகரமாக இருக்க வேண்டும் என அரசு நிபந்தனை விதித்துள்ளது. மேலும் தொடர்ந்து பணிபுரியும் வகையில் ஆசிரியர்கள் உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும் எனவும் நிபந்தனையில் அரசு தெரிவித்துள்ளது.