பாரத்பந்த் எதிரொலி- ரெயில் நிலையங்களில் பிளாட்பார டிக்கெட்களை வழங்குவதற்கு தடை

வட மாநிலங்களில் பல்வேறு அமைப்புகள் நடத்தி வரும் பாரத்பந்த் காரணமாக ரெயில் நிலையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாரத் பந்த் காரணமாக, பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும், மறு உத்தரவு வரும் வரை பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. ரெயில் பயனாளிகள் மற்றும் ரெயில்வே சொத்துக்களின் பாதுகாப்பை நிலை நிறுத்துவதற்கு, பயணிகள் மற்றும் பொதுமக்கள் ரெயில்வேயுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.