கார்ப்பரேட் அரசியல்
ஜனநாயகத்திற்கு பேராபத்து?


அரசியல் அதிகாரம் என்பது ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும் என்ற வரலாற்று வழித்தடங்களில் அரசியல் நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டுள்ளன. மாமனிதர்களால் மக்கள் நலன் என்கிற ஒற்றைப் புள்ளியில் மக்களின் மாண்புகள் மகத்தான சரித்திர நிகழ்வுகளில் சோதனை சுவடுகள் சரித்திர வரிகளில் சத்தியத்தின தீப ஒளியில் திசையெங்கும் திருப்புமுனை ஏற்படுவது நிதாசனம்.

நாகரீகம் நடைமுறையில் உள்ள மக்கள் சமூக, பொருளாதார, பண்பாடு இவைகளை சார்ந்து பொதுவான நோக்கங்களுக்காக கூட்டாகச் சேர்ந்து பெரிய அமைப்புகளை ஏற்படுத்தி செயல்பட்டு வருகின்றனர். கட்சி என்பது கூட்டு வாழ்க்கையின் அமைப்பு என்பது உண்மை அரசியல் இயக்கம் அல்லது கட்சி என்பது கடந்த முந்நூறு ஆண்டுக்குட்பட்ட ஒரு நவீன நிகழ்வாகும். அமெரிக்க ஐக்கிய நாடுகளை உருவாக்கியவர்களுக்கு கட்சி அமைப்பு முறையில் ஆரம்பத்தில் நம்பிக்கை இல்லை. இதனுடைய தாக்கம் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று எண்ணினார்கள்.

பு9&ம் நூற்றாண்டின் ஐரோப்பா வட அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் தான் முதன் முதலாக அரசியல் கட்சியும், கட்சி அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டன. தற்போதைய பெரும்பாலான நாடுகள் குடியாட்சிகள் பிரதிநிதித்துவ தன்மையை கொண்டுள்ளன. இத்தகைய குடியாட்சி அமைப்புகள் மக்களுக்கு அரசியல் ஆர்வத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியலில் பங்கேற்க கற்றுத் தருகின்றன.

அரசியல் வாழ்க்கையில் தங்களுக்கும் சில கொள்கைகளையும் கோட்பாடுகளையும் ஏற்படுத்திக் கொண்டு நாட்டின் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பே கட்சி என்பதாகும். “தங்களது கூட்டு முயற்சியால் குறிப்பிட்ட சில கொள்கைகளின் மீது தேசிய ஆர்வத்தை உருவாக்கி ஒத்த கருத்தை ஏற்படுத்தும் மக்கள் கூட்டமைப்பிற்கே அரசியல் கட்சி” எட்மண்ட் பர்க் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்டு அரசு அல்லது தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புகளுக்கு அரசியல் கட்சி என்பது மிகவும் அவசியம். மக்கள் மற்றும் அரசு வாக்காளர்கள் மற்றும் பிரதிநிதித்துவ நிறுவனங்களுக்கிடையே ஒரு உறவை ஏற்படுத்தும் பாலமாக அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. ஒரு அரசியல் முறையில் நாட்டின் சமுதாய தேவை மற்றும் குறிக்கோளை அடையும் வழிக்காட்டியாகவும் எண்ணங்களையும், கருத்துக்களையும் வெளிப்படுத்தும் கருவியாகவும் அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன.

மேலும் மக்களுக்கு அரசியல் பாடம் கற்றுக் கொடுத்து சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை ஒன்று திரட்டி அரசியல் மற்றும் தேர்தலில் பங்கேற்கச் செய்வதும் நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்காகவும் பாடுபடச் செய்வதே கட்சிகளின் பணியாகும். கட்சிகள் தலைமையை உருவாக்கும் நோக்கத்துடன் மக்களின் சிலரை, அவர்களுக்கு பயிற்சி அளித்து உள்ளாட்சி, சட்டமன்றம், பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவையில் பங்கேற்கும் அவர்கள் தயார் செய்யும் நோக்கத்தை அரசியல் கட்சிகள் செய்கின்றன.

“அரசியல் கட்சிகள் அரசியல் அதிகாரத்தை ஏற்றிச் செல்லும் வாகனங்களாகும். இவைகள் இல்லாமை, கள்ளாமை, இவைகளிலிருந்து மக்களை பொருளாதார சமூக ஏற்றத்தாழ்வுகள் போக்கும் செயல்படும் நோக்கமுடன் செயல்படும் அமைப்பாகத் தான் இன்றும் பல அமைப்புகள் செயல்படுகின்றன.

1.அரசியல் கட்சிகளில் ஒரு கட்சி மற்றும் பல கட்சிகள் முறை ஆதிக்கம் செலுத்துகின்றன.
2.கட்சிகளின் அமைப்பில் உள்ள முக்கிய குணாதிசயங்கள் யாவையெனில் சில கட்சிகள் தலைவனையும் சில கட்சிகள் கொள்கைளையும் சில அமைப்புகள் ஆர்வத்தையும் முன்னிலைப்படுத்தி செயல்பட்டு வருகின்றன.
3)கட்சிகள் நாட்டில் எந்தெந்தப் பகுதிகள் ஏற்படுகின்றனவோ அப்பகுதியின் செல்வாக்கை பயன்படுத்தி நாட்டிற்குள் ஊடுருவி பரவுகின்றன. இவை தேசியக் கட்சிகள் மண்டலக் கட்சிகள் மற்றும் உள்ளூர் கட்சிகள் என் செயல்படுகின்றன.

அரசியல் கட்சிகள் தங்கள் பகுதிகளில் வாழும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வரையில் தான் இருக்கும் இல்லையென்றால் இறக்கும். அரசியல் கட்சிகள் காலத்திற்கு ஏற்றவாறு கொள்கைகளை மாற்றிக் கொண்டு பெரும்பான்மை மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் வரை தழைக்கும் இல்லையென்றால் உதிர்ந்துவிடும். இப்போதெல்லாம் பல அரசியல் கட்சிகள், கார்ப்பரேட் கம்பெனிகள் போல இயங்கிக் கொண்டு வருவது ஜனநாயகத்திற்கு விடப்பட்டு இருக்கும் சவால் ஆகும். கட்சித் தொண்டர்கள், கட்சித் தலைமைக்கு தலை வணங்குகிறார்கள். கட்சி தலைமைகள் கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தலை வணங்குகிறார்கள். இந்த நிலை மாறினால் தான் ஜனநாயகம் பிழைக்கும் தழைக்கும். நிலை மாறுமா-?

தற்போதைய அரசியல் என்பது மக்களாட்சி முறையை மாற்றி முதலாளித்துவ அரசியலை முன்னெடுத்து செல்கின்ற நிலை உருவாகியுள்ளது. இதன் விளைவு கார்ப்பரேட் சிஸ்டம் என்ற அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறது. இதனை பின்பற்றுகின்ற அரசியல் இயக்கங்கள் மக்களை நம்புவதை விட பணத்தை முதலீடு ஆக்கி பான்ஸர்சிப் அரசியலை முன்னெடுக்கிறார்கள். ஆகவே வெற்றிப் பெறுகின்ற வேட்பாளர்கள் பெரும்பாலும் தங்கள் ஜனநாயக கடமையை தாண்டி கட்சி தலைமைக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்களாக அரசியல் நடத்தவேண்டிய தனிமனித புகழ்பாடுவதை முன்னெடுத்து செல்கிறார்கள். இவர்களுக்கு ஏற்றாற்போல் கட்சி தவால் தடை சட்டம் என்பது கைகொடுக்கிறது. மக்கள் பிரதிநிதிகள் தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்கள் சேவகர்களாகவும் தேர்தல் முடிந்த பிறகு கட்சியின் பிரதிநிதிகளாகவும் மாறிவிடுகிறார்கள். இதனை புரிந்துக் கொண்ட முதலாளிகள் நன்கொடை என்ற பிறகு அரசியல் கட்சிகளை தங்கள் சதாகமாக மாற்றிக்கொண்டு தொழில் வர்த்தகத்தை விரிவுப்படுத்திக் கொள்வதற்கும் பொருளாதாரத்தை உயர்த்தி கொள்வதற்கும் அரசியல் கட்சிகளை நாடுகிறார்கள். இத்தகைய முறையால் ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது பாதிக்கப்படுவதுடன் தனிமனித வருவாயும் உயர்வதற்கு வழியில்லை. இத்தகைய முறையை ஒழித்து ஜனநாயக முறையை கடைப்பிடித்தால் மட்டுமே நாடும் வளரும் மக்களும் வளர்ச்சி அடைவார்கள். தற்போதைய நிலையில் இதற்கு வாய்ப்பில்லை என்றே கூறவேண்டும். எங்கே போகும் இந்த பாதை என்பதை புரிந்து கொள்ளாமலே தற்போதைய அரசியல் இயக்கங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன. இத்தகைய முறையை மாற்றுவதற்கு மக்களை உருவகப்படுத்துவது ஒன்று தான் இதற்கு தீர்வாகும்.

- ஜே.பி