ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவுக்கு எதிரான சிவசேனா மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது
டெல்லி: ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவுக்கு எதிரான சிவசேனா கொறடா சுனில் பிரபு தொடர்ந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க நோட்டீஸ் மீது இன்னும் தீர்வு காணப்படவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென்றால் தகுதிநீக்க நடவடிக்கைக்கு அனுமதி தேவை என சிவசேனா தரப்பு வாதிட்டு வருகிறது.