விஜயகாந்த் உடல்நிலை குறித்து தமிழிசை சவுந்தரராஜன் பிரேமலதாவிடம் விசாரித்தார்சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரில் சிகிச்சை பெற்றார். அவரது கால்களில் உள்ள மூன்று விரல்கள் ஆபரேசன் மூலம் அகற்றப்பட்டது. இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதா விஜயகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஜயகாந்தின் உடல்நிலை குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தேன். மேலும் விஜயகாந்த் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணைநிலை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.