சென்னை மாநகர சாலைகளில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்புபவர்களை பிடிக்க
புதிய மிஷின்



சென்னை: சென்னையில் வாகனங்களில் செல்பவர்கள் அதிக ஒலி எழுப்புவதை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் புதிய நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளனர். சென்னை மாநகர சாலைகளில் செல்பவர்கள் அதிக ஒலி எழுப்புவதை கட்டுப்படுத்த கமிஷனர் சங்கர் ஜிவால், போக்கு வரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர் ஆகியோரது மேற்பார்வையில் விழிப்புணர்வு மேற் கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வருகிற 3-ந்தேதி வரை நடைபெறுகிறது. சென்னை முழுவதும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தீவிரமாக விழிப்புணர்வு செய்து கையெழுத்து இயக்கத்தையும் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அதிக ஒலி எழுப்புபவர்களை பிடிக்க புதிய மிஷின் வாங்கப்பட இருப்பதாகவும், அதன் பின்னர் அதிக ஒலி எழுப்புபவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் கண்டுபிடிக்கும் மிஷின் குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த மிஷின் செயல்பாட்டுக்கு வந்ததும், அதிக ஒலி எழுப்புபவர்களிடம் போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, 'மாசு கட்டுப்பாட்டு துறையினருடன் இணைந்து சென்னை மாநகர போலீசார் அதிக ஒலி அளவை அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். அதிக ஒலி எழுப்புவதாக சந்தேகிக்கப்படும் வாகனத்தை 7 மீட்டர் தூரத்தில் நிறுத்தி ஹாரன் அடிக்க சொல்லி பரிசோதிக்க உள்ளோம். ரூ.2 ஆயிரம் மதிப்பிலான இந்த மிஷினை தற்போது தன்னார்வலர்கள் உதவியுடன் பரிசோதித்து வருகிறோம்' என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். இதற்கிடையே இன்று சென்னை திருவொற்றியூரில் இன்று போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு தலைமையில் அதிகஓலி எழுப்பக்கூடாது என்பதை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டது. இதில் போக்குவரத்து போலீசார் பலர் பங்கேற்றனர். இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தவும் அதன் பின்னர் அபராதம் விதிக்கவும் முடிவு செய்துள்ளனர்.