சட்டம், ஒழுங்கு குறித்து
முதல்வர் மு.க.ஸ்டாலின்
தலைமையில் ஆலோசனை கூட்டம்
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டம், ஒழுங்கு நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.

தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்த நலையில் டிஜிபி உள்ளிட்டோருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

Popular posts