நாட்டின் முன்னேற்றத்திற்கு
பெண்களுக்கு அதிகாரமளித்தல் அவசியம்
பிரதமர் மோடி



இந்தியாவின் வளர்ச்சிக்கு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் வடோதராவில் 21 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அரசின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்த பிரதமர், நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: குஜராத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பெண்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்கு மத்திய அரசும்,மாநில அரசும் இரட்டை இஞ்ஜின் போல்செயல்பட்டு வருகிறது. தற்போது ராணுவம் முதல் சுரங்க தொழில்கள் என அனைத்திலும் பெண்களின் நலத்தை கருத்தில் கொண்டே கொள்கைகள் வடிவமைக்கப்படுகின்றன. 21 நூற்றாண்டில் இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைவதற்கு பெண்களுக்கு அதிகாரமளிக்கப்பட வேண்டும்.இதன்மூலம் அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படும். எனது அரசு பெண்களின் முன்னேற்றத்திற்கு இடையூராக இருந்த அனைத்து தடைகளையும் அகற்றி உள்ளது. இதனால் தற்போது அவர்கள் விரும்பிய துறைகளை தேர்வு செய்ய முடியும். இதற்கான அனைத்து கதவுகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.