அதிமுகவை உடைக்க சதி பின்னனியில் இருக்கும் சக்தி எது?




அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தின் முக்கிய முடிவாக இரட்டை தலைமைக்கு பதில் ஒற்றை தலைமை யார் என்று குறித்து முடிவு செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டதாக அதிமுகவின் அமைப்பு செயலாளருமான முன்னாள் அமைச்சருமான வி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் விளக்கமாக கூறியுள்ளார். கடந்த ஒரு வாரமாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பத்திரியாளர்களும் அரசியல் விமர்சகர்களும் ஒருபக்கம் சசிகலாவுக்கு ஆதரவாகவும் இன்னொருபக்கம் எடப்பாடி, ஒ.பி.எஸ் ஆதரவாகவும் பேசுவது போல் விவாதங்கள் நடைபெற்று கொண்டு வருகின்றன. குறிப்பாக சில தொலைக்காட்சிகள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஒன்றுப்பட்டு செயல்படுவதை விரும்பாமல் அதில் பிளவு ஏற்படுத்த வேண்டும் என்பது போல் விவாதம் நடத்துவதும் ஒ.பி.எஸ் ஒரு தியாகி என்பதை போல் சித்தரிப்பதும் விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறது.

ஆனால் பெரும்பாலான பத்திரிகையாளர்கள் விவாதத்தில் பங்கேற்று பேசும் பொழுது அதிமுக ஒன்றுப்பட வேண்டும் என்று பேசுவதும் அதற்கு சசிகலாவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பேசுவதும் தொலைக்காட்சியில் சர்வே நடத்துவதும் ஒரு தொடர்கதையாக இருந்து வருகிறது. ஆனால் திமுகவை தீவிரமாக எதிர்ப்பவர்கள் யார் என்பதை எந்த தொலைக்காட்சியும் ஊடகமும் கருத்துக்களை வெளியிடுவதில்லை. அதே போல் சசிகலாவின் செல்வாக்கை உயர்த்தி பிடிப்பதிலும் ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் உறுதியாக நிற்கின்றன. இவை தவிர எடப்பாடி பழனிசாமியை இழிவுப்படுத்துப் போல் பல நேரங்களில் விவாதங்கள் விமர்சனங்கள் செய்யப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் பின்னால் இருந்து இயக்கும் சக்தி எது என்பதை தெரிந்தாலும் அதை வெளிச்சம் போட்டு காட்டுவதற்கும் ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் தயாராக இல்லை. ஆளுங்கட்சியை பொறுத்தவரை ஏதோ ஒரு பார்வை எடப்பாடிக்கு எதிராகவும் ஒ.பி.எஸ் ஆதரவாகவும் இருப்பது போல் ஒரு தோற்றத்தை கட்டமைக்கிறது. ஆனால் திமுக ஆட்சி ஓராண்டுகள் கடந்தும் தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் சில குறிப்பிட்ட அம்சங்களை குறிப்பிட்டு விவாதங்கள் நடத்துவதில்லை. திராவிட மாடல் ஆட்சி என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள். அதற்குள் திராவிட நட்பு கழகம் என்று ஒன்றை தோற்றுவித்து அதன் மூலம் சில குறிப்பிட்ட நபர்களை வைத்து விவாதம் நடத்துகிறார்கள். எந்த திராவிட மாடல் குறித்து யாரெல்லாம் விவாதத்தில் பங்கேற்றார்களோ, திராவிடத்தை தூக்கி பிடிக்கிறார்களோ அவர்களே திராவிட நட்பு கழகத்திலும் இருந்துக் கொண்டு திராவிடத்தை தூக்கி நிறுத்தி கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுதெல்லாம் திராவிடர்களா, தமிழர்களா என்ற பொருள் குறித்து விவாதங்கள் அதிக அளவில் நடைபெறுவதில்லை. ஒரு கட்டத்தில் திராவிடம் என்ற சொல்லாடலை அதிமுகவும் தாங்கி பிடிக்கிறது. திமுகவும் உயர்த்தி பிடிக்கிறது. ஆனால் சீமான் போன்றவர்களை தவிர வேறு எவரும் தமிழர்கள் குறித்து பேசுவதில்லை. இந்த நிலையில் தற்பொழுது அதிமுகவில் ஒரு பிளவை ஏற்படுத்துவதற்கும் அதிமுகவின் வாக்கு வங்கியை குறைத்து மதிப்பிடுவதற்கும் ஒருசிலர் முயற்சி செய்து கொண்டு வருகிறார்கள். அதற்கு பாஜக தலைவர் அண்ணாமலையை உதாரணத்திற்கு அழைத்துக் கொள்கிறார்கள். உண்மையான எதிர்கட்சியாக அதிமுக செயல்படவில்லை என்றும் எதிர்கட்சி இடத்தை அண்ணாமலை பிடித்துக் கொண்டார் என்றும் விவாதிக்கிறார்கள். கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை எப்படி தண்டிப்பது என்றும் எப்படியும் தண்டிக்கப்படுவார் என்றும் கதைகளை புணர்கிறார்கள். ஆனால் எதிர்கட்சி தலைவரும் அதிமுகவின் பொதுச்செயலாளரும் எடப்பாடி பழனிசாமி எப்படியும் வந்துவிடுவார் என்று அதிமுகவில் உள்ள பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் முக்கிய பிரமுகர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், இதில் பெரும்பான்மையானவர்கள் எடப்பாடி பழனிசாமி அவர்களை ஆதரிக்கிறார்கள். இதனை தெரிந்துக் கொண்ட ஒ.பி.எஸ் தன்னுடைய செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய ஒரு தருணத்தில் இருப்பதால் வேறு வழியில்லாமல் எடப்பாடியோடு சமாதான முறையில் செல்வதற்கு முயற்சி வருவதாகவும் ஒ.பி.எஸ் ஆதரவாளர்களாக இருக்கும் ஒருசிலர் அழுகின்ற குழந்தை தான் பால்குடிக்கும் என்ற விதமாக தன்னுடைய அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கான முயற்சியில் ஒ.பன்னீர்செல்வம் ஈடுபட்டு வருகிறார்.

ஆனாலும் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை வழிநடத்துவதற்கான அதிக வாய்ப்புகள் முழு ஆதரவும் அவருக்கே இருப்பதாக தற்போதைய நிலவரம் தெளிவாக கூறுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதிமுகவை இரண்டாக உடைத்து இரட்டை இலையை முடக்கி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அணிதிரட்டுவதில் ஆர்வமுடன் செயல்படும் அந்த மர்மசக்தி எது? என்பது புரிந்தவர்களுக்கு புரியும், தெரிந்தவர்களும் தெரியும். அவர்கள் பெயரை சொல்ல விரும்பவில்லை என்கிறார்கள்.

- டெல்லிகுருஜி