கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் லில்லியம் மலர்கள்



கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் லில்லியம் மலர் வெள்ளை, சிவப்பு, ஆரஞ்சு, இளஞ்சிவப்பு நிறம், மெரூன் ஆகிய ஐந்து வண்ணங்களில் பூத்துக்குலுங்குவதை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கோடை விழா மற்றும் மலர் கண்காட்சிக்கு தயாராகி வருகிறது. இங்கு பல லட்சம் மலர் நாற்றுக்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டு நடவு செய்யப்பட்டது. தற்போது அவைகள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும் வகையில் பல்வேறு வண்ணங்களில் பூத்துக் குலுங்குகின்றன. பல வகை ரோஜா மலர்கள், டெல்பீனியம், சால்வியா, டயாந்தஸ், ஹாலண்டுல்லா, பிங்க் ஆஸ்டர் போன்ற பல்வேறு வகை மலர்கள் பூத்துக்குலுங்கும் சூழலில் நெதர்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட லில்லியம் மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

லில்லியம் மலர் வெள்ளை, சிவப்பு, ஆரஞ்சு, இளஞ்சிவப்பு நிறம், மெரூன் ஆகிய ஐந்து வண்ணங்களில் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்குவதை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்துச் செல்கின்றனர். இந்த வருடம் பிரையண்ட் முழுவதும் அதிக பரப்பளவில் நடவு செய்யப்பட்டுள்ள பல்வேறு வகையான பல வண்ணங்களில் பூத்துள்ள மலர்களுக்கு நடுவே லில்லியம் மலர்கள் மட்டும் சுற்றுலா பயணிகளிடையே தனி முத்திரை பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.