பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை- சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்சென்னை:

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு, 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த மாதம் நடைபெறவுள்ளது. மே 5-ம் தேதி ப்ளஸ் 2 வகுப்புக்கும், மே 6-ம் தேதி முதல் 10-ம் வகுப்புக்கும், மே 10-ம் தேதி முதல் ப்ளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடைபெறுகிறது.

இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்திருந்த நிலையில், பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.