இலங்கை போராட்டத்தின் பின்னணி என்ன..?



இலங்கையில் நடைபெற்று வரும் போராட்டம் பொருளாதார நெருக்கடியால் மட்டும் நடைபெறுகிறதா? அல்லது அதன் பின்னணியில் சர்வதேச தொடர்புகள் இருக்கின்றதா என்ற கோணத்தில் பார்க்க வேண்டிய ஒரு கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த இலங்கை பொருளாதாரத்தை மகிழ்ந்த கோத்தப்பய ராஜபக்சே அவரது குடும்பத்தார் ஒட்டுமொத்த இலங்கை வருவாயையும் அந்நிய செலவாணியும், பொருளாதாரத்தையும் கபளிக்கரம் செய்துவிட்டதினால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அதனால் விலைவாசி உயர்வு உயர்ந்து அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு இயற்கையாக உருவாக்கப்பட்டதா என்ற கோணத்தில் பல்வேறு விசாரணை ஏஜென்சிகள் மற்றும் ஊடகம், தொலைக்காட்சி, புலனாய்வுகள் இலங்கையில் நடைபெற்று வருகிறது. விலைவாசி ஏற்றம் அதிகரித்துள்ளது தவிர பொருள்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என்ற நிலையில் ஒரு தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.

குறிப்பாக இலங்கையில் உள்நாட்டு உற்பத்தியைவிட வெளிநாட்டு உற்பத்தி பொருட்களை அவசியம் அதிகளவில் இலங்கை அரசுக்கு ஒப்புதல் இருப்பதால் பன்நாட்டு உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்வதற்கு போதிய அந்நிய செலவாணி கையிருப்பு இலங்கையில் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. அதனால் இந்த விலையேற்றமும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு காரணமாக போய்விட்டது. இதனால் தான் ஒட்டுமொத்த இலங்கையிலும் இதுபோன்ற மக்கள் புரட்சி, மொழி, மதம், சாதி இவைகளை கடந்து இதுபோன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தினால் ராஜபக்சே, கோத்தப்பய ராஜபக்சே அவரது குடும்பத்தார்களுக்கு எதிராக போராட்டக்காரர்களின் கோபம் திரும்பியுள்ளது. இதனால் அவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டால் பிரச்சனையை சுலபமாக செய்யலாம் என்றும் இல்லையென்றால் பிரச்சனை வேகமாக உருவெடுத்து அது அதிபர் மட்டும் பிரதமர் அச்சுறுத்தும் வாய்ப்பாக இருக்கும் என்று இலங்கையில் இருந்து வரும் செய்திகள், மற்றும் தொலைக்காட்சி மூலம் வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. ஆகவே இலங்கை மக்கள் போராட்டம் என்பது ஆட்சிக்கு எதிராக இல்லாமல் ஆட்சியில் எதிராக இருப்பவர்கள் நடைபெற்று வருகிறது என்பதை நிரூபிக்க முடிகிறது.

உலக நாடுகளின் பார்வையும், ஐ.நா சபையின் பார்வையும் இலங்கையின் மீது பதிந்து இருப்பதினால் இலங்கையில் நடைபெறும் இனபடுகொலையும், போராட்டத்தையும் கூர்ந்து கவனித்து வருவதுடன் ஆட்சியில் இருப்பவர்கள் மக்களுக்கு எதிரான போராட்டத்தை காவல்துறை ராணுவமுறை அடக்குமுறை கட்டவிழ்த்து விட கூடாது என்றும் மக்களை அச்சுறுத்த கூடாது என்றும் ஐ.நா.சபையின் தகவல்கள் இலங்கை அதிபருக்கு எச்சரிக்கையாக விடுத்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் வசிக்கும் பகுதிகளில் புத்த பிச்சுகள் கலவரத்தை கட்டுப்படுத்துகின்ற முயற்சியில் ஈடுபட்டு அதில் அவர்கள் தோல்வியடைந்து உள்ளார்கள் என்பதையும், போராட்டத்தை நிறுத்த முடியவில்லை என்பதையும் பார்க்க முடிகிறது.

அதிபர் கோத்தப்பய ராஜபக்சே, பிரதமர் மஹிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தார் பதவி விலகுவதே தற்போதைய நெருக்கடியில் இருந்து இலங்கையும், இலங்கை மக்களையும் காப்பாற்ற முடியும். ஆனால் பதவி விலகுவதற்கு அதிபர் குடும்பம் தயாராக இல்லை என்பதை இலங்கை நாடாளுமன்றத்தின் அரசு தலைமை கொரடா பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இதனால் இலங்கையில் நடைபெறும் போராட்டம் மேலும் தீவிரமடைந்து வருவதாக கூறப்படுகிறது.

- டெல்லிகுருஜி